ரூல்.267.. மோடி பேசணும்.. மோடி பேசணும்! மேசையை தட்டி சொன்ன எம்பி.. அதிர்ந்த நாடாளுமன்றம்.. யார் அது?
டெல்லி: இன்று நாடாளுமன்றத்தில் ராஜ்ய சபாவில் மணிப்பூர் விவகாரம் எழுப்பப்பட்டது. எதிர்க்கட்சி எம்பிக்கள் இது தொடர்பாக பேச முயன்றதால் அவை முடங்கியது.
மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு சாலையில் ஊர்வலமாக ஆண்களால் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. பெண்களின் அந்தரங்க உறுப்புகளை தாக்கி நடுரோட்டில் மக்கள் முன் பரேட் போல கொண்டு சென்று உள்ளனர்.

சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற அவமானகரமான விஷயங்களில் ஒன்றாக இந்த விஷயம் வரலாறு முழுக்க பதிவாகும் அளவிற்கு மக்கள் மனதை பாதித்து உள்ளது. அதில், நடுரோட்டில் இருந்து பொட்டை காடு ஒன்றிற்கு அழைத்து சென்று அங்கே இந்த பெண்களை பலாத்காரம் செய்துள்ளனர். 30க்கும் மேற்பட்ட ஆண்கள் அங்கே இருக்க.. பல ஆண்கள் இரண்டு பெண்களையும் மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் சிறுவர்கள் பலரும் தொடர்பு உண்டு என்று வீடியோக்கள் மூலம் தெளிவாகி உள்ளது. கடந்த மே மாதம் 4ம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ இப்போதுதான் வெளியாகி உள்ளது. மக்கள் இடையே இந்த வீடியோ மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இத்தனை நாட்கள் கழித்து வீடியோ வெளியான காரணத்தால் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது மணிப்பூர் மாநில போலீஸ்.
இந்த விவகாரத்தில் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட இரண்டு பெண்களில் ஒருவர் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த வீடியோவில் இருக்கும் நபர்களின் மீதும் கொலை வழக்கும் பதியப்பட்டு உள்ளதாக மணிப்பூர் போலீசார் தெரிவித்துள்ளார்.
ராஜ்ய சபா: இந்த நிலையில் இன்று நாடாளுமன்றம் கூடியதும் இரண்டு அவைகளிலும் மணிப்பூர் விவகாரம் எழுப்பப்பட்டது. இன்று நாடாளுமன்றத்தில் ராஜ்ய சபாவில் மணிப்பூர் விவகாரம் எழுப்பப்பட்டது. எதிர்க்கட்சி எம்பிக்கள் இது தொடர்பாக பேச முயன்றதால் அவை முடங்கியது. அவை தொடங்கும் முன் 15 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சார்பாக நாடாளுமன்ற அலுவல் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
மணிப்பூரில் நடந்து வரும் வன்முறைகள் குறித்து விவாதிக்கவும் ஒத்திவைப்பு தீர்மானத்தை முன்வைத்தனர். ஆனால் இது இரண்டு அவைகளிலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால் இரண்டு அவைகளிலும் கடும் அமளி ஏற்பட்டது. எதிர்கட்சி எம்பிக்கள் மோடி பேசவேண்டும்.. இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் மோடி பேச வேண்டும் என்று குரல் கொடுத்தனர்.
ராஜ்ய சபாவில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரைன் பேசினார். அவர் இதற்கு முன் பல முறை விதி 267ன் கீழ் நாடாளுமன்ற அலுவல் ஒத்திவைப்பு தீர்மானங்களை கொண்டு வந்து இருக்கிறார். தற்போதைய துணை ஜனாதிபதி, ராஜ்ய சபா சபாநாயகர் ஜெகதீப் தன்கர் வந்ததில் இருந்தே இதுவரை ஒருமுறை கூட இது போன்ற ஒத்திவைப்பு தீர்மானங்களுக்கு அனுமதி கொடுத்ததே இல்லை.
"There can be no other business in #RajyaSabha till matter submitted under Rule 267 is discussed"
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) July 20, 2023
"We want a discussion on #Manipur THE PRIME MINISTER HAS TO SPEAK FIRST"
MY INTERVENTION IN #PARLIAMENT TODAY FOR @AITCofficial pic.twitter.com/JzgzS7iMfj
இதை சுட்டிகாட்டி பேசிய எம்பி டெரிக், விதி 267 என்ன சொல்கிறது என்று உங்களுக்கு இங்கே சொல்கிறேன்.. கேட்டுக்கொள்ளுங்கள்.. இந்த விதியின் கீழ் அவை ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தால்.. அவையில் அந்த தீர்மானத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட விஷயத்தை மட்டும்தான் பேச வேண்டும். அதுவரை வேறு எதைப்பற்றியும் ஒரு வார்த்தை கூட பேச கூடாது.
இந்த தீர்மானத்தை எடுத்தால் அதுவரை அனைத்து அலுவல்களையும் தள்ளி வைத்துவிட்டு பேச வேண்டும்.. இங்கே மோடி வர வேண்டும்.. மோடி மணிப்பூர் பற்றி பேச வேண்டும்.. மோடி பேச வேண்டும்.. மோடி பேச வேண்டும் (மேசையை தட்டுகிறார்) என்று டெரிக் மீண்டும் மீண்டும் மேசையை தட்டி ஆக்ரோஷமான குரலில் பேசியது அவையையே அதிர செய்தது. அவரின் பேச்சை தொடர்ந்து ராஜ்ய சபா பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications