டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் டெல்லி பயணம்- 2 நாள் முகாம்- மோடி, அமித்ஷாவை சந்திக்கிறார்?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் டெல்லி பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் டெல்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை அவர் சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையம்.. நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்! தஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையம்.. நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து முதல்வராக மே 7-ந் தேதி மு.க.ஸ்டாலின் பதவிய் ஏற்றார். அவருடன் 33 அமைச்சர்களும் ஒரே நாளில் பதவி ஏற்றனர்.

டெல்லியில் டி.ஆர். பாலு முகாம்

டெல்லியில் டி.ஆர். பாலு முகாம்

இதனையடுத்து கொரோனா தடுப்பு பணிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். டெல்லியில் மத்திய அரசின் உதவிகளைப் பெறுவதற்காக திமுக நாடாளுமன்ற குழுவின் தலைவர் டி.ஆர். பாலுவை அங்கேயே முகாமிட்டு தங்க வைத்துள்ளார் ஸ்டாலின்.

மத்திய அரசுக்கு எதிர்ப்பு

மத்திய அரசுக்கு எதிர்ப்பு

திமுகவை பொறுத்தவரை எதிர்க்கட்சியாக இருந்த போது மத்திய அரசை எந்த எந்த கொள்கை அடிப்படைகளில் எதிர்த்ததோ அதே நிலைப்பாட்டை தொடர்ந்து கடைபிடித்துதான் வருகிறது. புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு, ஜிஎஸ்டி கவுன்சில் அதிகாரங்கள் என அனைத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் திமுகவின் குரல் ஓங்கித்தான் ஒலிக்கிறது.

ஸ்டாலின் டெல்லி பயணம்

ஸ்டாலின் டெல்லி பயணம்

இந்நிலையில் சம்பிரதாய முறைப்படி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க டெல்லிக்கு மு.க. ஸ்டாலின் செல்ல திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. டெல்லியில் முதல்வர் ஸ்டாலின் 2 நாட்கள் தங்க திட்டமிட்டுள்ளாராம்.

டெல்லிக்கு முதல்வராக முதல் பயணம்

டெல்லிக்கு முதல்வராக முதல் பயணம்


இந்த பயணத்தின் போது செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு மையத்த தமிழக அரசு வசம் ஒப்படைப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் அடங்கிய மனுவை மோடி, அமித்ஷாவிடம் ஸ்டாலின் தர இருக்கிறாராம். முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் ஸ்டாலின் முதல் முறையாக டெல்லி செல்வதால் இப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது.

English summary
Sources said that Tamilnadu Chief Minister M.K. Stalin will to visit Delhi and to meet PM Modi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X