மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அமைச்சர் பிடிஆர் திடீர் சந்திப்பு.. காரணம் இதுதான்!
டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசினார். டெல்லியில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று சந்தித்தார். டெல்லியில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. நிர்மலா சீதாரமனுடனான சந்திப்பு குறித்த தகவலை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகாரஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்ததாவது:-

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தேன். டெல்லியில் உள்ள நாடாளுமன்ற இல்லத்தில் சந்திப்பு நடைபெற்றது. வருமான வரித் தரவுகளுடன் ஏபிஐ இணைப்பைப் பெற்ற முதல் மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியதற்காக நன்றி தெரிவித்தேன். அதுமட்டும் இன்றி நான் நிதி அமைச்சராக இருந்த போதும் ஜி.எஸ்.டி கவுன்சில் உறுப்பினராக இருந்த சமயத்திலும் ஒத்துழமைப்பு வழங்கியதற்காக அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றியை தெரிவித்தேன்.
மழைக்கால கூட்டத்தொடருக்கு நடுவே அவர் எனக்கு நேரம் ஒதுக்கி கொடுத்ததற்கு நன்றி" இவ்வாறு பதிவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:- வருமான வரி தாக்கல் செய்பவர்களின் விவரங்கள் மாநில அரசுகளுக்கு அளிக்கப்பட்டால் அதை வைத்து நலத்திட்டங்கள் மற்றும் பல்வேறு சேவைகளை அளிப்பதை சரிபார்க்கலாம் என தொடர்ந்து மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இப்போது இந்தியாவிலேயே முதல் மாநிலமாக வருமான வரி தாக்கல் செய்பவர்கள் 35 லட்சம் பேரின் விவரங்கள் தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் பல திட்டங்கள் குறிப்பாக மகளிர் உரிமை தொகை திட்டம் உள்பட பல திட்டங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். தகவல் தொழில்நுட்ப துறையில் டிஎன்இஜிஏ மூலமாக தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
தமிழகம் வைத்த கோரிக்கையை ஏற்று இந்த முன்மாதிரி திட்டத்தை செய்து கொடுத்ததற்காக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்து நன்றி கூறினேன்" என்றார். முன்னதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும், இதே தகவல் பகிரப்பட்டு இருந்தது. இருவரும் சந்தித்து பேசியது தொடர்பான புகைப்படங்களும் பதிவிடப்பட்டு இருந்தன.
தமிழக நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்து தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடந்த மே மாதம் மாற்றப்பட்டார். அவர் வசம் இருந்த நிதித்துறை பொறுப்பு தங்கம் தென்னரசுவிடம் ஒப்படைக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ் பால்வளத்துறைக்கு மாற்றப்பட்டு, அவரிடம் இருந்த ஐடி துறை அமைச்சர் பிடிஆருக்கு ஒப்படைக்கப்பட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications