டெல்லியில் இறங்கிய உடனே அமைச்சர்கள் துரிதம்.. நேபாளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்கும் பணி தீவிரம்
டெல்லி நேபாளத்தில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி சுமார் 400 மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்களின் நிலை குறித்து தெரியவில்லை. நூற்றுக்கணக்கான தமிழர்களும் நேபாளத்தில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியை ஒருங்கிணைப்பதற்காக அமைச்சர்கள் குழுவினர் டெல்லி சென்றுள்ளனர். டெல்லியில் உள்ள தமிழக இல்லத்தின் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்தும், தூதரக அதிகாரிகளிடம் பேசியும் தமிழர்களை மீட்பதற்கான நடவடிக்கையில் அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நேபாளம் நாட்டின் கோஷி ஆற்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இது அந்த நாட்டில் உள்ள 7 மாவட்டங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்திற்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்வார்கள். இந்த பேரிடரில் சிக்கி 392 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மாயமான சுமார் 1,000 பேரை தேடும் பணியில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டுள்ளது.

மோப்ப நாய் உதவியுடன் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நோபளம் நாட்டிற்கு தமிழகத்தில் இருந்தும் சுற்றுலா சென்றுள்ளனர். சென்னையில் இருந்து 50 பேர் கைலாஷ் யாத்திரை சென்றனர். அவர்கள் வெள்ளத்தில் சிக்கி மாயமாகியிருப்பது தெரியவந்துள்ளது. கோவை ஈஷா யோகா மையத்தின் குழுவை சேர்ந்த 80 பேரும் நேபாளம் சென்றுள்ளனர். அவர்களின் நிலை குறித்தும் தெரியவில்லை. தமிழகத்தில் இருந்து சென்ற சிலர் நேபாளத்தில் பத்திரமாக உள்ளனர்.
நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் முயற்சி செய்து வருகின்றன. தமிழ்நாடு அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவினர் நேபாளம் விரைந்துள்ளனர். இதேபோல மீட்புப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், வினோத், தென்னரசு ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர்.
டெல்லி தமிழக இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு உதவி மையத்தில் அமைச்சர்கள் குழுவினர் இன்று காலை ஆய்வு செய்தனர். நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பதற்கான செயல்பாடுகள், நடவடிக்கை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். முன்னதாக அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "நேபாளத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்பதற்காக 4 அமைச்சர்கள் டெல்லி விரைந்துள்ளோம்.
முதலில் தமிழகத்தை சேர்ந்த ஒரு குழுவின் 50க்கும் மேற்பட்டோர் மட்டும் நேபாளம் சென்றதாக நினைத்தோம். இப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட குழுவை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. 26 பேர் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களின் தொடர்புகளை கண்டறிவதில் சிக்கல் உள்ளது. சிலரை கண்டறிய முடியவில்லை. அவர்களின் குடும்பத்தினர் பரிதவிப்பில் உள்ளனர். மத்திய அரசு, நேபாள அரசுடன் பேசி அவர்களுக்கான உதவிகளை செய்வோம். விரைவில் அவர்களை மீட்டு வருவோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணை நிற்போம்" என்றார்.


Click it and Unblock the Notifications
