முல்லை பெரியாறு அணை! பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள விடாமல் கேரளா தடுக்கிறது - தமிழக அரசு
டெல்லி: முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு தேவையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள விடாமல் கேரளா தடுக்கிறது என உச்சநீதிமன்றத்தில் தமிழகம் பதில் மனு தாக்கல் செய்திருக்கிறது.
முல்லைப் பெரியாறு அணையை பராமரிப்பது தொடர்பாக மேற்பார்வை குழு ஆய்வை மேற்கொண்டிருந்தது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 13ம் தேதி, செப்டம்பர் மாதம் 2 ஆகிய தேதிகளும், இந்த ஆண்டு ஜனவரி மாதம் 23ம் தேதி, மார்ச் 22 ஆகிய தேதிகளில் முல்லை பெரியாறு அணையை பராமரிக்க மேற்பார்வை குழு விரிவான ஆலோசனை நடத்தி உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை ஏற்று தமிழ்நாடு அரசு அணையை பராமரித்திருக்க வேண்டும். ஆனால் பராமரிக்கவில்லை.
தமிழ்நாடு அரசு அணையை பராமரித்தால், அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்திவிடும் என்று பயந்த கேரள அரசு, தமிழ்நாடு அரசை பராமரிப்பு பணிகளை செய்ய விடாமல் தடுத்தது. பராமரிப்பு பணிகளுக்கான எந்த அனுமதியையும் வழங்கவில்லை.
இதை எதிர்த்துள்ள தமிழ்நாடு அரசு, மேற்பார்வை குழு பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த கேரள அரசுக்கு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சென்று வர அனுமதிக்க வேண்டும். அதேபோல, மரங்களை வெட்டி ஒதுக்குவது, படகுகள் செல்ல அனுமதிப்பது, சாலை அமைப்பது உள்ளிட்ட பணிகளை செய்ய கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறது.
மழைக்காலம் தொடங்கும் முன்னதாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும், அதற்கு ஏற்ப 2006, 2014 ஆம் ஆண்டு முல்லை பெரியாறு இறுதி தீர்புகளின் அடிப்படையில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு மனுவில் தெரிவித்திருக்கிறது. இந்த வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications