மேகதாது அணை விவகாரம்- தமிழக சட்டசபை கட்சித் தலைவர்கள் குழு இன்று டெல்லி பயணம்!
டெல்லி: கர்நாடகாவின் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மத்திய அரசிடம் முறையிடுவதற்காக தமிழ்நாடு அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக சட்டசபை கட்சித் தலைவர்கள் குழு இன்று டெல்லி செல்கிறது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதில் கர்நாடகா பிடிவாதம் காட்டி வருகிறது. மேகதாது அணை கட்டுவதற்காக கர்நாடகா நிதிநிலை அறிக்கையில் ரூ1,000 கோடி ஒதுக்கீடு செய்தும் உள்ளது.இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

மேலும் மேகதாது அணை கட்டுமானத்திற்கான திட்ட அறிக்கையையும் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திடம் வழங்கி அனுமதி கேட்கிறது கர்நாடகா. அம்மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும் இதற்கு ஆதரவாக உள்ளனர். இதனால் கடந்த 17-ந் தேதி நடைபெற இருந்த காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்டுமான திட்ட அறிக்கையை விவாதிக்கவும் மத்திய அரசு அனுமதி தந்தது. ஆனால் இதற்கு எதிராக தமிழகம், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து இந்த கூட்டம் வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை மத்திய அரசுக்கு உணர்த்துவதற்காக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் சட்டமன்றக் கட்சித் தலைவர்களின் குழு டெல்லி செல்வது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. மத்திய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்தித்து வலியுறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இக்குழு டெல்லி சென்று மத்திய அமைச்சரைச் சந்திப்பதற்கான நேரம் கேட்கப்பட்டுள்ளது. விரைவில் இக்குழு டெல்லி செல்லும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கர்நாடகாவின் மேகதாது அணை வரைவு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்க கூடாது; காவிரி ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க கூடாது என்பதை மத்திய அரசிடம் வலியுறுத்த உள்ளது தமிழகம். இதற்காக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் சட்டசபை அனைத்து கட்சித் தலைவர்கள் குழு இன்று டெல்லி செல்கிறது.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications