தேர்தல் கணிப்புகளால் திடீர் மாற்றம்.. ராகுல், சோனியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த மாயாவதி
Recommended Video
டெல்லி: டெல்லியில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதிக்கு இன்று எந்த நிகழ்ச்சியோ, சந்திப்போ இல்லை என அந்த கட்சி திடீரென பல்டி அடித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் திமுக அதிமுக கட்சிகளாக இருந்து வந்த அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி, மாயவதியின் பகுஜன் சமாஜ் கட்சிகள் இந்த முறை இணைந்து மகா கூட்டணி என்ற பெயரில் மக்களவை தேர்தலை சந்தித்துள்ளன. இதன்படி இரு கட்சிகளும் தலா 38 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளன.

உத்தரப்பிரதேசத்தை ஆளும் பாஜக தனியாக தேர்தலை சந்தித்து உள்ளது. காங்கிரஸ் கட்சியும் தனித்து தேர்தலை சந்தித்துள்ளது. இந்நிலையில் தேசிய மற்றும் மாநில ஊடகங்களின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் பாஜக கூட்டணியே 60க்கும் மேற்பட்ட இடங்களை பிடிக்கும் என தேசிய ஊடங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கூட்டணி 10 முதல் 16 இடங்களை மட்டுமே பிடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை மாயாவதி இன்று சந்திக்க உள்ளதாக நேற்று காலையில் செய்திகள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் டெல்லியில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதிக்கு இன்று எந்த நிகழ்ச்சியோ, சந்திப்போ இல்லை என அந்த கட்சியின் நிர்வாகி எஸ்.சி.மிஸ்ரா தெரிவித்துள்ளார்.தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜக கூட்டணிக்கு சாதகமாக வந்த நிலையில், மாயவதி கட்சியின் இந்த பல்டி காங்கிரஸ் கட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications