என்னங்க இது.. மத்திய பிரதேசத்தில் காங்கிரசை துடைத்து எறியும் காவி.. பாஜகவிற்கு கிளீன் ஸ்வீப்.. சர்வே
போபால்: மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் பாஜக கிளீன் ஸ்வீப் செய்யும், முழு மெஜாரிட்டி பெறும் என்று டுடேஸ் சாணக்யா தெரிவித்துள்ளது. பெரும்பாலும் துல்லியமாக கணிப்புகளை வெளியிடும் இந்த அமைப்பு காங்கிரஸ் கட்சி கடந்த முறையை விட குறைவான இடங்களை பெற்று படுதோல்வி அடையும் என்று கணித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் கடந்த முறை கூட இப்படித்தான் நடந்தது. கடந்த தேர்தலில் அங்கே காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் 114, பாஜக 109 இடங்களில் வென்றது.
ஆனால் 1 வருடத்தில் அங்கே கமல்நாத் ஆட்சியை ஜோதிராதித்யா சிந்தியா கவிழ்த்தார். இவர் பாஜகவில் இணைந்து தன்னுடன் சில எம்எல்ஏக்களையும் அழைத்து சென்று ஆட்சியை கவிழ்த்தார். இதன்பின் வந்த இடைத்தேர்தலில் பாஜக கூடுதல் எம்எல்ஏக்களை மீண்டும் சிவராஜ் சிங் சவுகான் ஆட்சிக்கு வந்தார்; தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலில் பாஜக 19 இடங்களில் வென்றது. இதன் மூலம் 128 இடங்கள் என்று மெஜாரிட்டி பெற்று பாஜக ஆட்சிக்கு வந்தது.
4 முறை தொடர் ஆட்சி: தற்போது அங்கே 4 முறை சவுகான் முதல்வராக இருந்துவிட்டார். கடந்த முறையே ஆபரேஷன் கமலா மூலம்தான் ஆட்சிக்கு வந்தார். அதனால் இந்த முறை அவருக்கு வாய்ப்பு கொடுக்க பாஜக யோசிக்கிறது. காங்கிரஸ் கட்சியும் பெண்களுக்கு மாதம் உதவிதொகை, இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட வாக்குறுதிகள் மூலம் அடித்து மேலே வந்தது. இருந்தாலும் இந்த முறையும் மத்திய பிரதேசத்தில் அங்கே பாஜகதான் ஆட்சியை பிடிக்கும் என்று டுடேஸ் சாணக்யா கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கே பெரும்பான்மை பெறுவதற்கு 116 இடங்களில் வெல்ல வேண்டும். கடந்த 4 முறையாக அங்கே பாஜகதான் ஆட்சி செய்து வருகிறது. 3 முறையாக வரிசையாக அங்கே 2005ல் இருந்து 2013 வரை அங்கே பாஜக ஆட்சி செய்தது. அதன்பின் மீண்டும் ஆப்ரேஷன் கமலாவுக்கு பின் கடந்த 4 ஆண்டுகளாக அங்கே ஆட்சி செய்தது.

கருத்து கணிப்பு: மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் பாஜக கிளீன் ஸ்வீப் செய்யும், முழு மெஜாரிட்டி பெறும் என்று டுடேஸ் சாணக்யா தெரிவித்துள்ளது. பெரும்பாலும் துல்லியமாக கணிப்புகளை வெளியிடும் இந்த அமைப்பு காங்கிரஸ் கட்சி கடந்த முறையை விட குறைவான இடங்களை பெற்று படுதோல்வி அடையும் என்று கணித்துள்ளது. .
அவர்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில், மத்தியப் பிரதேசத்தில் பாஜகவுக்கு 151 ± 12 இடங்களும், காங்கிரஸுக்கு 74 ± 12 இடங்களும் மற்றவர்களுக்கு 5 ± 4 இடங்களும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது பாஜகவிற்கு கிளீன் வெற்றி என்று கணிக்கப்பட்டு உள்ளது.
தேர்தல் நடந்தது எப்போது - முடிவு எப்போது; பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த 5 மாநில தேர்தல் பார்க்கப்படுகிறது. அடுத்த வருடம் ஏப்ரல் - மே மாதம் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து தற்போது 5 மாநில தேர்தல் முடிவுகள் அதற்கு வரப்போகும் டீசர் போல பார்க்கப்படுகிறது. இதில் மத்திய பிரதேசம் - நவம்பர் 14ம் தேதி தேர்தல் நடந்தது. வரும் டிசம்பர் 3ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications