சுங்கச்சாவடிகள் 6 மாதத்தில் அகற்றப்படும்..இனி சுங்க கட்டணம் எப்படி தெரியுமா? கட்காரி கொடுத்த அப்டேட்
டெல்லி: நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகள் அகற்றப்பட்டு அவற்றுக்குப் பதிலாக 6 மாதத்தில் ஜி.பி.எஸ். அடிப்படையிலான கட்டண வசூல் முறை அமல்படுத்தப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
ஜிபிஎஸ் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும் புதிய தொழில்நுட்பம் அடுத்த ஆறு மாதங்களில் அமல்படுத்தப்படும்.
நமது நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் பயணிக்க சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கார்கள் உள்ளிட்ட இலகு ரக வாகனங்களுக்கு ஒரு கட்டணம் கனரக வாகனங்களுக்கு ஒரு கட்டணம் என வாகனங்களின் தன்மைக்கு ஏற்ப கட்டண விகிதங்கள் மாறுபடுகின்றன.

போக்குவரத்து நெரிசல்
துவக்கத்தில் சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகள் நேரடியாக பணத்தை செலுத்தி செல்லும் நிலை இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதோடு, கடுமையான போக்குவரத்து நெரிசலும் சுங்கச்சாவடிகளில் ஏற்பட்டது. குறிப்பாக வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும் பண்டிகை நாட்களில் எல்லாம் சுங்கச்சாவடிகளில் பல நூறு மீட்டர்கள் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் சூழல் கூட முன்பு இருந்தது.

சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்
அதன்பிறகு தற்போது பாஸ்ட் டேக் முறையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் சுமார் 600-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், சுங்கக் கட்டண வசூலில் புதிய நடைமுறையை அமல்படுத்த மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. அதாவது, நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகள் அகற்றப்பட்டு அவற்றுக்குப் பதிலாக 6 மாதத்தில் ஜி.பி.எஸ். அடிப்படையிலான கட்டண வசூல் முறை அமல்படுத்தப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

ஜிபிஎஸ் அடிப்படையில் கட்டணம்
இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நிதின் கட்காரி இந்த தகவலை தெரிவித்தார். நிதின் கட்காரி கூறுகையில், " நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் தற்போது உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஆறு மாதங்களில் அமல்படுத்தப்படும்
ஜிபிஎஸ் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும் புதிய தொழில்நுட்பம் அடுத்த ஆறு மாதங்களில் அமல்படுத்தப்படும். சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, வாகன ஓட்டிகள் பயணித்த தொலைவுக்கு மட்டுமே கட்டணம் விதிக்கப்படும். சுங்க கட்டண வருவாய் தற்போது 40,000 கோடியாக உள்ள நிலையில், அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் ரூ.1.40 லட்சம் கோடியாக அதிகரிக்கும்" என்றார்.

எப்படி செயல்படுத்தப்படும்?
நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளுக்கு பதிலாக வாகனங்களின் நம்பர் பிளேட்களை பதிவு செய்து அறியும் சென்சார் கேமராக்கள் நெடுஞ்சாலைகளில் குறிப்பிட்ட இடங்களில் பொருத்தப்படும். அதன் மூலமாகவே நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் தூரத்தை வைத்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த புதிய முறை மூலம் நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்துவதற்காக காத்திருக்க வேண்டிய நிலை இருக்காது. பாஸ்ட் டேக் முறையில் சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு நேரம் வெகுவாக குறைந்தாலும் நகரங்களை ஒட்டிய சுங்கச் சாவடிகளில் நெரிசல் நேரங்களில் வாகனங்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலையே காணப்படுகிறது. இதனால், புதிய முறையை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என மத்திய நெடுஞ்சாலை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications