கத்தி கத்தி வத்தி போச்சு.. தேர்தல் பிரச்சாரத்தால் குரல் வளத்தை இழக்கும் நிலைக்கு சென்ற சித்து!
தேர்தல் பிரச்சாரத்தில் தொடர்ந்து பேசியதால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தனது பேச்சு திறனை இழக்கும் நிலைக்கு சென்று இருக்கிறார்.
டெல்லி: தேர்தல் பிரச்சாரத்தில் தொடர்ந்து பேசியதால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தனது பேச்சு திறனை இழக்கும் நிலைக்கு சென்று இருக்கிறார்.
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்காக தீவிரமாக உழைத்து வரும் நவ்ஜோத் சிங் சித்து, அங்கு மிக முக்கியமான தலைவராக பார்க்கப்படுகிறார். இவர் காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவர் என்றும் கூறலாம்.
பாகிஸ்தான் சென்றது, அந்நாட்டு தலைவர்களை சந்தித்தது, பின் பஞ்சாப்பில் சொந்த காங்கிரஸ் கட்சியினரிடையே மோதல் போக்கை கடைபிடிப்பது என்று நவ்ஜோத் சிங் சித்து நிறைய முறை சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார்.

தொடர் பேச்சு
இவர் கடந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்தார். சட்டிஸ்கர், மிசோரம், மத்திய பிரதேஷ் தொடங்கி இன்று தேர்தல் நடக்கும் தெலுங்கானா, ராஜஸ்தான் மாநிலத்திலும் தீவிரமாக பிரச்சாரம் செய்தார். இதனால் இவர் 17 நாட்கள் விடாமல் பிரச்சாரம் செய்துள்ளார்.

பெரிய பிரச்சனை
மொத்தம் 82 இடங்களில் இவர் மேடை போட்டு பேசியதாக கூறப்படுகிறது. இடையில் இவர் ஒருநாள் கூட ஓய்வு எடுக்கவில்லை. சிறு சிறு மேடைகளில் கூட, பல மணி நேரங்கள் கத்தி கத்தி தனது ஸ்டைலில் பேசி இருக்கிறார். இது இல்லாமல் தொலைக்காட்சி பேட்டிகளிலும் பேசியுள்ளார். இதனால் அவரது குரல் வளம் பாதிக்கப்பட்டு உள்ளது.

குரல் போனது
ஆம், இவர் இப்படி தொடர்ந்து பேசியதால் இவரின் குரல் வளமே மொத்தமாக போகும் நிலையை அடைந்து உள்ளது. கடந்த 24 மணி நேரமாக இவரால் பேச முடியவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலை
இதே நிலைமை இன்னும் இரண்டு நாட்கள் நீடித்தால் இவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க வேண்டி இருக்கும் என்கிறார்கள். அப்படி நடக்கும்பட்சத்தில் தொண்டையில் சிறிய ஆபரேஷன் செய்ய வேண்டி வரலாம் என்கிறார்கள். இதனால், அவர் மிகவும் வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications