Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மொத்தம் 6 பிளான்கள்.." உத்தரகண்ட் சுரங்க மீட்பு பணிகளில் அடுத்தடுத்து பரபரப்பு.. எது சிறந்த வழி?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தரகண்ட் மாநிலத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க இப்போது மொத்தம் 6 பிளான்களை மீட்புப் படையினர் கையில் எடுத்துள்ளனர். அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

கடந்த நவம்பர் 12ஆம் தேதி உத்தரகண்ட்டில் உள்ள சில்க்யாராவில் கட்டப்பட்டு வந்த சுரங்கத்தில் 41 தொழிலாளர்கள் சிக்கினர். அவர்களை மீட்கும் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது.

 Total of 6 rescue plans has been formulated in Uttarakhand tunnel rescue plan

பிளான் ஏ திட்டத்தில் அவர்களுக்கும் துளையிடும் கருவிக்கும் இடையே வெறும் 5 மீட்டர் மட்டுமே இருந்தது. இருப்பினும், அங்கே இயந்திரத்தால் துளையிட முடியவில்லை. எவ்வளவோ முயன்றும் அதைத் தாண்டி துளையிட முடியாத நிலையில், அந்த திட்டம் கைவிடப்பட்டது.

மீட்புப் பணி: இதையடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை செங்குத்தாகத் துளையிடும் பணிகள் தொடங்கப்பட்டது. ஒரு பக்கம் முன்பு துளையிடப் பயன்படுத்தப்பட்ட ஆகர் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய முயற்சிகள் நடக்கும் நிலையில், மறுபுறம் ஊழியர்களே நேரடியாகத் தோண்டும் பணியும் நடந்து வருகிறது. அவர்கள் எப்போது மீட்கப்படுவார்கள் என்று துல்லியமாகச் சொல்ல முடியாது என்ற தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது. இருப்பினும் அவர்கள் மீட்கப்படுவது உறுதி என்று கூறியுள்ளது.

இப்போது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மீட்பு பணிகளுக்கு மொத்தம் ஆறு திட்டங்கள் வைத்திருக்கிறது. அவை குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வரும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், எந்த பிளான் சரியாக இருக்குமோ அதை மேற்கொள்ள ரெடியாக இருக்கிறது.

மொத்தம் 6 பிளான்: இதில் முதல் பிளானை தான் நேற்று ஆரம்பித்துள்ளனர். அதாவது செங்குத்தாகத் துளையிடும் முயற்சி.. தற்போதுள்ள 6 பிளான்களில் இதுதான் பெஸ்ட் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். நேற்று மதியம் இந்த பணி தொடங்கப்பட்ட நிலையில், ஏற்கனவே 15 மீட்டருக்கும் மேல் துளையிடும் பணி முடிந்துவிட்டது. மொத்தம் 86 மீட்டர் இப்படி செங்குத்தாக துளையிட்டு உள்ளே இருப்போரை மீட்க வேண்டும்.

அடுத்து பக்கவாட்டில் துளையிடுதல் இதில் இருக்கும் இரண்டாவது வழியாகும். இருப்பினும், இதற்குத் தேவையான பக்கவாட்டு துளையிடும் இயந்திரங்கள் நேற்று மாலை வரை விபத்து நடந்த இடத்திற்கு வரவில்லை. அவை இன்னும் சில மணி நேரங்களில் அங்கே செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல்வேறு ஆப்ஷன்கள்: அடுத்து மூன்றாவதாக டிரிஃப்ட் டெக்னாலஜி (DRIFT TECHNOLOGY) என்பதையும் பரீசிலனை செய்து வருகிறார்கள். இத்திட்டத்தின்படி குழாயை நிலையாக வைத்திருக்க வேண்டும். ஆகரின் உடைந்த பகுதிகளை அகற்றி பக்கவாட்டு மற்றும் மேலிருந்து கீழாக இரண்டு பக்கமும் துளையிட வேண்டும். இதில் அவர்களை மீட்கப் பல நாட்கள் வரை ஆகலாம் என்பதால் உள்ளே இருப்போரின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்கிறார்கள் வல்லுநர்கள்.

அடுத்த பிளான்படி, சுரங்கப்பாதையின் மற்றொரு முனையான பார்கோட் முனையிலிருந்து வெடிகுண்டுகளை வைத்து 483 மீட்டர் நீளமுள்ள மீட்பு சுரங்கத்தை உருவாக்குவது அடுத்த வழி. இதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் ஏற்கனவே 5 வெடிகளை வைத்து 12 மீட்டருக்கு மீட்பு சுரங்கம் தோண்டப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

அடுத்து ஐந்தாவது பிளான் இதே இடத்தில் இருந்து சுரங்கத்தைத் தோண்டுவது. இருப்பினும், இதற்கு அங்கே நாம் இயந்திரங்களை எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கு ஏற்ற சாலைகள் அங்கே இல்லாத நிலையில், சாலை அமைக்கும் பணிகள் ஒரு பக்கம் நடந்து வருகிறது.

இதுதான் பெஸ்ட்: இவை அனைத்தையும் விடச் சிறந்த வழி என்றால் அது இதுவரை மேற்கொள்ளப்பட்ட கிடைமட்ட துளையிடுவதுதான். இதுவரை இப்படி 47 மீட்டருக்கு துளையிட்டுள்ளார்கள். உள்ளே சிக்கியுள்ளவர்களுக்கும் இயந்திரத்திற்கும் சில மீட்டர் இடைவெளி மட்டுமே இருந்தது. இப்போது ஆகர் இயந்திரத்தைச் சரி செய்யும் பணிகள் நடந்து வருவதாகவும் மீண்டும் இந்தத் திட்டத்தைத் தொடங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+