திமுக டி.ஆர் பாலுவின் 'திராவிட நாடு' கோரிக்கை பேச்சு- திடுக்கிட்ட நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம்!
டெல்லி: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில், திராவிட நாடு பிரிவினை கோரிக்கை தொடர்பாக பேரறிஞர் அண்ணா நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையை சுட்டிக்காட்டினார் திமுகவின் டிஆர் பாலு எம்பி.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் இன்று டி.ஆர். பாலு எம்.பி. பேசியதாவது: தற்போது கூட்டப்பட்டிருப்பது ஒன்றும் சிறப்பு கூட்டம் அல்ல. வழக்கமான ஒரு நாடாளுமன்றக் கூட்டம்தான் இது. எந்த ஒரு தேவையுமே இல்லாமல் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்லது. பல கோடி ரூபாய் பணம் செலவழித்து கட்டப்பட்டு திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் ஏன் முந்தைய கூட்டத் தொடர் நடத்தப்படவில்லை?

நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் முடிவடைந்து 76-வது ஆண்டு நடைபெறுகிறது. 75 ஆண்டுகால நிகழ்வுகளை நினைவுகூற வேண்டுமானால் கடந்த ஆண்டுதான் 2022-ம் ஆண்டுதான் செய்திருக்க வேண்டும்.இப்போது ஏன் நினைவு கூறுகிறோம்?
1962-ம் ஆண்டு திமுக நாடாளுமன்றத்தில் நுழைந்தது. அப்போது முதல் அனைத்து விவாதங்களிலும் திமுக பங்கேற்று வருகிறது.
திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டாலும் அதற்கான காரணங்கள் உயிரோடு இருக்கின்றன என நாடாளுமன்றத்தில் அறிவித்தார் அண்ணா.
1969-ல் பெரும்பான்மை இழந்த போது இந்திரா காந்தி அரசுக்கு திமுக ஆதரவு அறிவித்தது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை பறிக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய செயல், ஏற்கனவே இருக்கும் புண்ணில் உப்பைக் கொட்டுகிற செயல்.
1999-ல் நெருக்கடியான சூழலில் வாஜ்பாய் அரசுக்கு திமுக ஆதரவு அளித்தது. அப்போது அதிமுகவால் நெருக்கடியை சந்திப்பதாக வாஜ்பாயே கூறியிருந்தார். வாஜ்பாய் ஆட்சியில் பொக்ரான் அணுகுண்டு சோதனை உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் திமுக ஆதரவு அளித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர், தமிழ்நாடு, மணிப்பூர் மாநில மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை. இவ்வாறு டி.ஆர். பாலு கூறினார்.
திமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே சனாதன ஒழிப்பு பேச்சு விவகாரத்தில் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்தார். தற்போது நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் திடீரென திராவிட நாடு கோரிக்கை குறித்த அண்ணாவின் உரையை சுட்டிக்காட்டி திமுக எம்பி டிஆர் பாலு பேசியது அனைவரது கவனத்தையும் திருப்பிவிட்டது.
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications