புதிய கேபிள் டிவி கட்டணம்... மார்ச் 31வரை அவகாசம் நீட்டிப்பு
டெல்லி: புதிய கேபிள் டிவி கட்டண அறிவிப்பினை வரும் மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை நீட்டித்து டிராய் அறிவித்துள்ளது.
பார்க்கும் சேனலுக்கு மட்டுமே காசு, பார்க்காத சேனலுக்கு எதுக்கு காசு, என்ற புதிய கொள்கையை கேபிள் டிவி கட்டண விதிப்பில்
இந்திய தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் கடந்த 2017ம் ஆண்டு மார்ச் மாதம் கொண்டு வந்தது.
இதன்படி ஒவ்வொரு சேனலும் எவ்வளவு கட்டணம் என்பதை அறிவிக்க வேண்டும். அந்த சேனல்களை வாடிக்கையாளர்களே தேர்ந்தெடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

புதிய கட்டணம் கட்டணம்
அதன்படி, கேபிள் மற்றும் டிடிஹெச்சில் விதிமுறைகளை நடைமுறைப்படுத்த கடந்த ஆண்டு டிசம்பர் 29ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசத்தை ஜனவரி 31ம் தேதியாக நீட்டித்து டிராய் கடந்த மாதம் அறிவித்தது. இந்த காலஅவகாசம் முடிந்தததால் புதிய கட்டணக் கொள்கை பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

மூன்று ஆப்சனகள்
சேனல்கள் கொடுக்கும் திட்டம், டிடிஹெச் திட்டம், பொதுமக்கள் தேர்ந்தெடுக்கும் ஆப்சன் என 3வகையில் டிடிஹெச் நிறுவனங்கள் ஆன்லைனில் பட்டியலை போட்டுள்ளன. இதனை மக்கள் தேர்ந்தெடுத்து வருகிறார்கள். இந்தியாவில் தற்போது 10 கோடி வீடுகளில் கேபிள் டிவியும், 6.7 கோடி வீடுகளில் டிடிஹெச் சேவையும் உள்ளது.

மக்களிடையே குழப்பம்
இதில் கேபிள் வைத்திருப்போரில் 65 சதவீதம் பேரும், டிடிஹெச் வைத்திருப்போரில் 35 சதவீதம் பேரும் தங்களுக்கு தேவையான சேனல் பட்டியலை தேர்ந்தெடுத்துவிட்டனர். மற்ற மக்கள் இன்னும் தேர்ந்தெடுக்கவில்லை. இதனிடையே, புதிய சேனல்களை தேர்வு செய்வதிலும், பழைய சேனல் பேக்குகளை நீக்குவதிலும் பொதுமக்களுக்கு குழப்பம் இருப்பதாக டிராயிடம் முறையிடப்பட்டது.

அவகாசத்தை நீட்டித்த டிராய்
இதனால் டிராய் நிறுவனம், மக்களிடையே கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களுக்கு புதிய கேபிள் கட்டணத்தை தேர்ந்தெக்க வைக்க விரும்பியது. இதையடுத்து கேபிள் டிவி புதிய கட்டண முறைகளை அமல்படுத்துவதற்கான அவகாசத்தை மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்து டிராய் அறிவித்துள்ளது. எனவே அடுத்த மாத இறுதிக்குள் தங்களுக்கு பிடித்த சேனல்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications