குருகிராம் டூ பாரிதாபாத் வரை.. டெல்லி வெடிகுண்டு சம்பவ ஹுண்டாய் ஐ20 கார்.. பல கைகள் மாறியது எப்படி?
டெல்லி: டெல்லி குண்டுவெடிப்புக்கு மூல காரணமான வெள்ளை நிற ஹூண்டாய் i20 கார் பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கார் எங்கிருந்து வந்தது? எத்தனை மணிக்கு டெல்லி வந்தது?, யார் யார் இந்த காரை வைத்திருந்தனர்? எப்படி இந்த பயங்கரவாத சம்பவத்துக்கு இந்த கார் பயன்படுத்தப்பட்டது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லி செங்கோட்டை எதிரே உள்ள மெட்ரோ ரயில் நிலையம் அருகே போக்குவரத்து சிக்னல் பகுதியில் நேற்று முன்தினம் மாலை 6.52 மணியளவில் யாரும் எதிர்பாரா நேரத்தில் திடீரென ஒரு வெள்ளை நிற ஹூண்டாய் i20 கார் வெடித்து சிதறியது. சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது போல் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி அதன் பாகங்கள் நாலாபுறத்திலும் சிதறின.

ஹூண்டாய் i20 கார்
இதில் அந்த சிக்னலில் நின்று கொண்டிருந்த மற்ற வாகனங்கள் மீதும் பட்டு தீப்பிடித்தன. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள லோக் நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடக்கத்தில் காரில் கியாஸ் சிலிண்டர் அல்லது பேட்டரி வெடித்து இருக்கலாம் என கூறப்பட்ட நிலையில் தொடர்ந்து அது திட்டமிட்ட நாசவேலை எனவும் சந்தேகிக்கப்பட்டது.
இது தொடர்பாக தீவிர விசாரணை ஒருபுறம் நடந்து வரும் நிலையில், கார் வெடிப்புக்கு மூல காரணமான வெள்ளை நிற ஹூண்டாய் i20 காரை யார் ஓட்டி வந்தார்? அந்த காரில் என்ன இருந்தது? என்பது தொடர்பான அடுத்தடுத்த தகவல் வெளியாகி வருகின்றன.
வெளியான சிசிடிவி காட்சிகள்
அதாவது சம்பவம் நடந்த அதே நாளில் காலையில் ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் 2,900 கிலோ வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ரசாயன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. இதேபோன்று ஏகே 47 துப்பாக்கி உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. இதனால் போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக பயங்கரவாதிகள் வெடிபொருட்களை மாற்றும்போது எதிர்பாராதவிதமாக டெல்லி சிக்னல் அருகே நின்றபோது வெடித்து சிதறியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இதனை எல்லாம் உறுதிப்படுத்த போலீசார் அந்த கார் எங்கிருந்து வந்தது, யார் பெயரில் இருக்கிறது என்பது குறித்து விசாரணை நடத்தினர். இதில் டெல்லி குண்டுவெடிப்புக்கு காரணமாக கூறப்படும், 'ஹூண்டாய் ஐ -20' கார், ஹரியானா மாநிலம் பரிதாபாதில் இருந்து டெல்லிக்கு வந்தது என்பதை சிசிடிவி காட்சிகள் மூலமாக போலீசார் உறுதி செய்தனர்.
ஹரியானாவில் இருந்து புறப்பட்ட கார்
* அதாவது நேற்று முன்தினம் காலை 7:30 மணிக்கு இந்த கார் ஹரியானா மாநிலம் பரிதாபாதில் உள்ள ஏசியன் மருத்துவமனையில் உள்ள கேமிராவில் பதிவாகி இருந்தது.
* இதற்கு அடுத்ததாக காலை 8:13 மணியளவில் டெல்லியின் நுழைவுவாயிலாக கருதப்படும் பதர்பூர் சுங்கச்சாவடி அருகே காணப்பட்டது. அங்கிருந்து காலை 8:20 மணியளவில் டெல்லி ஓக்ல தொழிற்பேட்டை அருகே உள்ள பெட் ரோல் பங்கை கடந்து சென்றது.
3.19 மணிக்கு டெல்லி வந்தது
* பின்னர் மாலை 3:19 மணியளவில் டெல்லி செங்கோட்டை வளாகம் அருகே உள்ள வாகன நிறுத்துமிடத்திற்குள் வந்தது. அங்கு மட்டும் சுமார் 3 மணி நேரம் வரை அந்த காரானது நிறுத்தப்பட்டிருந்தது.
* இதன் பிறகு தான் அந்த கார் மாலை 6:22 மணியளவில் வாகன நிறுத்துமிடத்தில் இருந்து டெல்லி செங்கோட்டை நோக்கி வந்துள்ளது. அப்போது சரியாக மாலை 6.52 மணியளவில் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள சிக்னலில் வந்த போது அந்த கார் வெடித்து சிதறியுள்ளது.
காரை ஓட்டிச்சென்றவர் யார்?
ஜம்மு காஷ்மீரில் புல்வாமாவைச் சேர்ந்த உமர் முகமது (வயது 35) என்பவர் தான்
காரை ஓட்டிச்சென்றது கண்காணிப்பு கேமிரா காட்சிகள் மூலமாக தெரியவந்துள்ளது. இவர் சம்பவ இடத்திலேயே பலியாகி இருப்பார் எனவும், சிதைந்த உடல் இவருடையதாகத்தான் இருக்கும் என சந்தேகித்துள்ள போலீசார் டிஎன்ஏ சோதனை செய்ய உத்தரவிட்டு இருக்கிறார்கள்.
உமர் முகமது பரிதாபாத்தில் உள்ள அல்பலா மருத்துவ பல்கலைக்கழகத்தில் டாக்டராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களும் இங்குதான் பணியாற்றி வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காருக்கு உண்மையான ஓனர் யார்?
டெல்லி குண்டு வெடிப்புக்கு காரணமான வெள்ளை நிற ஹுண்டாய் ஐ20 கார் பல கைகள் மாறி, இறுதியில் இந்த பயங்கரவாத வழக்கில் சிக்கி இருக்கிறது. தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணையைத் தொடங்கியபோது, இந்த காரானது குர்கானின் சாந்தி நகர் முகவரியில் பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. முகமது சல்மானின் பெயரிலேயே இந்த காரானது உள்ளது.
கார் முதலில் 2014 ஆம் ஆண்டு பழைய குர்கானில் வசிக்கும் திலீப் என்பவரால் வாங்கப்பட்டது. ஏழு ஆண்டுகள் பயன்படுத்தப்பட்டு பின்னர் விற்கப்பட்டது. 2020 இல், சல்மான், ஒரு கண்ணாடித் தொழிற்சாலை ஊழியர், ஃபரிதாபாத்தில் இருந்து காரை வாங்கினார். அவர் 2016 முதல் 2021 வரை வசித்த சாந்தி நகரில் உள்ள தனது வாடகை வீட்டில் பதிவு செய்தார்.
பரிதாபாத் தௌஃபிக்கிடம் விற்பனை
இந்த ஆண்டு மார்ச் மாதம் ரமலான் சமயத்தில், சல்மான் காரை விற்க முடிவு செய்து, அதை ஒரு ஆன்லைன் தளம் மூலம் விற்பனைக்கு அறிவித்தார். காரை விற்ற போதிலும், வாகனப் பதிவு அலுவலக (RTO) பதிவுகளில் உரிமை மாற்றம் செய்யப்படவில்லை. காரின் பதிவு சல்மான் பெயரிலேயே இருந்தது.
பின்னர், ஐ20 கார் ஒரு டெல்லி கார் டீலரிடம் சென்று, இறுதியில் சோனு என்ற முகவர் மூலம் ஃபரிதாபாத்தில் உள்ள தௌஃபிக்கிற்கு விற்கப்பட்டது. கடந்த மூன்று மாதங்களாக கார் ஃபரிதாபாத்தில்தான் இருந்தது. போலீசார் குர்கானில் பதிவு செய்யப்பட்ட காரைக் கண்டுபிடித்து, நேற்று இரவு 9.30 மணிக்கு சாந்தி நகர் முகவரிக்குச் சென்றனர். அங்கு சல்மான் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே அந்த வீட்டை காலி செய்துவிட்டது தெரியவந்தது.
எந்த தொடர்பும் இல்லை
தற்போதைய வீட்டு உரிமையாளர் தினேஷ், சல்மானின் சகோதரர் ஜாவேத் சாந்தி காலனியில் வசிப்பதாகத் தெரிவித்தார். இதையடுத்து அங்கு சென்ற போலீசார், அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் விசாரித்தனர். அதன்பிறகு சல்மானை விசாரிக்க குளோபல் ஹைட்ஸ் சொசைட்டிக்குச் சென்றனர். சல்மான் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, கார் விற்பனைக்கான டிஜிட்டல் ஆதாரங்களை வழங்கினார்.
அவரும் ஜாவேத்தும் மேல் விசாரணைக்காக டெல்லி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அப்போது "நாங்கள் காரை சட்டப்பூர்வமாக விற்றோம். இந்த சம்பவத்திற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று சல்மானின் மனைவி கூறினார். இதுவரை, இந்த குண்டுவெடிப்புக்கும் குடும்பத்திற்கும் நேரடித் தொடர்பு இல்லை என்றாலும், அவர்களுக்கு முன்னரே ஏதேனும் தகவல் தெரிந்ததா என்பதை அறிய போலீசார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
-
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications