நிறைவேறியது முத்தலாக்.. இனிமேல் 3 ஆண்டு சிறை.. கிரிமினல் குற்றம்.. புதுச்சட்டம் என்ன சொல்கிறது?
முத்தலாக் தடை சட்டம் அமலுக்கு வந்துள்ளதால், முத்தலாக் சொல்லி விவாகரத்து கோரும் ஆண்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும்.
Recommended Video
டெல்லி: முத்தலாக் தடை சட்டம் அமலுக்கு வந்துள்ளதால், முத்தலாக் சொல்லி விவாகரத்து கோரும் ஆண்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும்.
முத்தலாக் தடை சட்ட மசோதா தற்போது ராஜ்யசபாவில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இந்த மசோதாவிற்கு 99 எம்பிக்கள் ஆதரவு அளித்தனர். 84 எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். லோக்சபா மற்றும் ராஜ்யசபா இரண்டிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன் மூலம் முத்தலாக் தடை சட்டம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. இந்த மசோதா பின்வரும் சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

1. இந்த முத்தலாக் தடை சட்டம் மூலம் மனைவி தனது கணவன் மீது புகார் கொடுக்கலாம். அல்லது அந்த பெண்ணின் ரத்த உறவினர்கள், திருமணம் மூலம் உண்டான உறவினர்கள் புகார்கள் கொடுக்கலாம்.
2. இந்த சட்டம் மூலம் குற்றம் நிருபிக்கப்பட்ட ஆண் 3 ஆண்டு சிறையில் அடைக்கப்படுவார்.
3. அதே சமயம் இந்த சட்டம் மூலம் பெயில் பெற முடியும். ஆனால் குற்றம்சாட்டிய பெண்ணின் அனுமதியுடன் மட்டுமே மெஜிஸ்ட்ரேட் பெயில் வழங்க முடியும்.
4. அதேபோல் இந்த சட்டம் மூலம் கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் பேசி, தங்களுக்குள் சுமூகமான தீர்வை கொண்டு வந்து வழக்கை வாபஸ் செய்ய விரும்பினாலும் செய்யலாம்.
5. விவாகரத்து செய்த கணவனுடன் மீண்டும் பெண் சேர வேண்டும் என்றால் அந்த பெண் வேறு ஒருவரை மணமுடித்து பின் விவாகரத்து செய்திருக்க வேண்டும் என்று நிக்கா ஹலாலா முறை ஒழிக்கப்படும். அதற்கு பதிலாக இந்த சட்டம் மூலம் சமாதானம் செய்து கணவனும் மனைவியும் ஒன்று சேரலாம்.
6. அதேபோல் முத்தலாக் பெற்ற பெண் இந்த சட்டம் மூலம் கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் பெற முடியும். இந்த பணத்தை மெஜிஸ்டிரேட் நிர்ணயம் செய்வார்.
7. அதேபோல் மைனர் குழந்தைகளை பாதுகாக்கும் உரிமை இந்த சட்டம் மூலம் மனைவிக்கு வழங்கப்படும். குழந்தைக்கு உரிமை கோரும் உரிமை பெண்ணுக்கே வழங்கப்படும்.
-
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
வாட்ஸ்அப்பில் வந்த முத்தலாக்'.. குவைத்தில் இருந்து ராஜஸ்தான் பெண்ணுக்கு ஷாக் கொடுத்த கணவர் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications