வெற்றிகரமாக நிறைவேறியது முத்தலாக் தடை சட்டம்.. மசோதாவிற்கு ஆதரவு 99.. எதிர்ப்பு 84!
முத்தலாக் தடை சட்ட மசோதா தற்போது ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டு வாக்கெடுப்பு நடந்து வருகிறது.
Recommended Video
டெல்லி: முத்தலாக் தடை சட்ட மசோதா தற்போது ராஜ்யசபாவில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இந்த மசோதாவிற்கு 99 எம்பிக்கள் ஆதரவு அளித்தனர். 84 எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் மூலம் முத்தலாக் தடை சட்டம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது.
முத்தலாக் நடைமுறைக்கு தடை விதித்து ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே சமயம் இஸ்லாமிய பெண்களை, இஸ்லாமிய ஆண்கள் தலாக் என்று மூன்று முறை கூறி விவகாரத்து செய்யும் முறையை தடுக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக முயன்று வந்தது.
தற்போது மக்களைவை மற்றும் மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்பு என்ன
சென்ற மோடி தலைமையிலான ஐந்தாண்டு ஆட்சியிலேயே லோக்சபாவில் இந்த முத்தலாக் தடை சட்ட மசோதாவை பாஜக வெற்றிகரமாக நிறைவேற்றியது. ஆனால் அப்போது பாஜகவிற்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லை.

லோக்சபாவிலும் வெற்றி
இதற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு இல்லை என்பதால் தொடர்ந்து அவசர சட்டம் இயற்றி இதை அரசு பயன்படுத்தி வந்தது. தேர்தல் நடந்து முடிந்து லோக்சபாவில் மீண்டும் முத்தலாக் தடை சட்ட மசோதாவை பாஜக தாக்கல் செய்தது. இது லோக்சபாவிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

இன்று தாக்கல்
இதையடுத்து இன்று ராஜ்யசபாவில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில்தான் இதன் மீதான வாக்கெடுப்பு தற்போது நடந்தது.மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே அதிமுக எம்பிக்கள் வெளியேறினர்.

எதிர்ப்பு தெரிவித்தனர்
மசோதாவிற்கு திமுக, காங்கிரஸ் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, பிஎஸ்பி, தெலுங்கு தேசம் கட்சி மாநிலங்களவையில் வாக்கெடுப்பை புறக்கணித்தது. அதன்பின் வாக்குசீட்டு முறை மூலம் வாக்கெடுப்பு நடந்தது.

நிறைவேற்றம்
முக்கிய எதிர்க்கட்சிகள் சில வெளிநடப்பு செய்துள்ளதால் மசோதா நிறைவேற சாதகமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் முத்தலாக் தடை சட்ட மசோதா தற்போது ராஜ்யசபாவில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இந்த மசோதாவிற்கு 99 எம்பிக்கள் ஆதரவு அளித்தனர். 84 எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் மூலம் முத்தலாக் தடை சட்டம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது.

என்ன கணக்கு
இந்த மசோதாவிற்கு திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, அதிமுக ஆகியவை எதிர்ப்பு தெரிவித்தது. அதேபோல் பாஜக மற்றும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அதிமுக தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் ஆதரவு அளித்தது. ஆதரவாக 99 வாக்குகள், எதிராக 84 வாக்குகள், வெளிநடப்பபு 30 பேர் என்பதால் மசோதா நிறைவேறியது.
-
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்!












Click it and Unblock the Notifications