உச்சக்கட்ட எதிர்பார்ப்பு.. திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் தொடங்கியது வாக்கு எண்ணிக்கை
3 வடகிழக்கு மாநிலங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்க இருக்கிறது
டெல்லி: திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல்கள் நடந்து முடிந்து இருக்கும் நிலையில் காலை 8 மணியளவில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ளது.
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் கடந்த பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அதை தொடர்ந்து கடந்த 27 ஆம் தேதி மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு 3 மாநிலங்களிலும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ளது. இதற்காக வாக்கு எண்ணும் மையங்கள் காவல்துறை மற்றும் துணை ராணுவ பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

பலத்த பாதுகாப்பு
3 மாநிலங்களிலும் காலை முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதை தொடர்ந்து பலத்த கண்காணிப்பு மத்தியில் பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கப்பட்டு உள்ளது. மேகாலயா மாநிலத்தில் 13 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

மேகாலயா வாக்கு எண்ணிக்கை
மேகாலயா மாநில முதலமைச்சரும் தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான கான்ராட் சங்மா தேர்தலை ஒட்டி அசாம் மாநில முதலமைச்சரும் பாஜகவை சேர்ந்தவருமான ஹிமந்தா பிஸ்வா சங்மாவை கவுஹாத்தியில் சந்தித்து பேசினார். மேகாலயாவில் பாஜக, என்பிபி கட்சிக்கு இடையே மோதல் போக்கு நீடித்த நிலையில் அந்த மாநில தேர்தல் முடிவுகள் உற்று நோக்கப்படுகின்றன.

திரிபுராவில் பாதுகாப்பு
பாஜக ஆளும் திரிபுரா மாநிலத்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையும் தொடங்கி உள்ளன. இதன் காரணமாக வாக்கு எண்ணும் மையங்கள் மற்றும் மாநில எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கின்றது. குறிப்பாக அசாம் மற்றும் மிசோரம் ஆகிய மாநில எல்லைகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அதேபோல் திரிபுராவில் 856 கிலோ மீட்டர் நீள இந்தியா - வங்கதேச எல்லையிலும் பாதுகாப்பை தீவிரப்படுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருக்கிறது.

நாகாலாந்து
நாகாலாந்து மாநிலத்திலும் 4 மாவட்டங்களிலும் மறு தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்பட்டதை தொடர்ந்து வாக்குப்பதிவு மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. அங்குள்ள 59 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் சிஆர்பிஎப் படை மூன்று அடுத்து பாதுகாப்பு வழங்குகிறது. அனைத்து வாக்கு எண்ணும் மையங்கள் அருகிலும் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications