இந்திய ஆட்டோமொபைல் துறையில் பாய்ந்த வெளிச்சம்! டிரம்ப் உத்தரவால் நிம்மதி பெருமூச்சு விட்ட வணிகர்கள்!
டெல்லி: மெக்சிகோ, கனடாவுக்கு விதிக்கப்பட்ட வரியை 30 நாட்களுக்கு ஒத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால் இந்திய ஆட்டோமொபைல் துறை நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி ஆட்டோமொபைல் துறையின் பங்கு மதிப்பு உயர்ந்திருக்கிறது.
முறையான ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்களை அவரவர் நாட்டுக்கே டிரம்ப் அனுப்பி வருகிறார். குறிப்பாக, அமெரிக்காவில் வசிக்கும் மெக்சிகோ மக்களை மீண்டும் மெக்சிகோவுக்கே அனுப்பினார். இதை மெக்சிகோ அரசு ஏற்றுக்கொள்ள மறுத்தது. இதனால் அந்த நாட்டுக்கு 25% வரை வரியை அமெரிக்கா விதித்தது.

அதாவது இந்த வரியால், மெக்சிகோவிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்காவில் விற்கப்படும் பொருட்களின் விலை 25% வரை உயரும். இந்த வரியால் இந்திய ஆட்டோ மொபைல் துறை அடிவாங்கியது. அதாவது ஆண்டுக்கு ரூ.1.84 லட்சம் கோடி அளவுக்கு இந்திய ஆட்டோ மொபைல் துறை வாகன உதிரி பாகங்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இதில் 3% அதாவது ரூ.5,719 கோடி அளவுக்கு மெக்சிகோவுக்கு ஏற்றுமதியாகிறது. ஆனால் மெக்சிகோ மீது விதிக்கப்பட்ட வரி காரணமாக இந்த ஏற்றுமதி திடீரென சரிந்தது.
இப்போது வரி விதிப்பு 30 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதால், மீண்டும் இந்திய ஆட்டோமொபைல் துறையின் பங்கு மதிப்பு உயர தொடங்கியுள்ளது. குறிப்பாக,
1.சோனா பிஎல்டபிள்யூ (Sona BLW Precision Forgings Ltd)
2.சம்வர்தனா (Samvardhana Motherson International Ltd),
3.Bharat Forge Ltd
உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் 8% வரை அதிகரித்துள்ளன. இதனை எலரா செக்யூரிட்டிஸ் நிறுவனம் உறுதி செய்திருக்கிறது. இது பங்கு ஆராய்ச்சி நிறுவனமாகும்.
இதேபோன்று வரியை விதிக்காமல் இருந்தால் இந்திய நிறுவனங்கள் நஷ்டமடையாமல் இயங்கும். இருப்பினும் சீனாவுக்கு கூடுதல் வரி விதிப்பதன் மூலம் இந்தியாவுக்கு லாபமும் இருக்கிறது. உதாரணமாக சீனாவில் உற்பத்தி செய்யப்படும் ஆப்பிள் மொபைல், கூடுதல் வரி காரணமாக அமெரிக்காவில் அதிக விலைக்கு விற்கப்பட்டால், ஆப்பிள் நிறுவனம் இந்தியாவை நோக்கிதான் வரும். எனவே, இந்தியாவுக்கு வர்த்தக வாய்ப்புகள் அதிகரிக்கும்.
இதற்கு இந்திய நிறுவனங்கள் தயாராக இருக்க வேண்டியது அவசியமாகும். ஐபோன் மட்டுமல்லாது பல்வேறு நிறுவனங்கள் இனி வரும் காலங்களில் இந்தியாவை நோக்கி படையெடுக்கும் என்று சொல்லப்படுகிறது. அதற்கான அனைத்து உள்கட்டமைப்பு பணிகளையும் நாம் சரியாக செய்து வைத்திருந்தால், உலக அரங்கில் நாம் தவிர்க்க முடியாத சக்தியாகிவிடுவோம்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications