பிரதமர் மோடிக்கு திடீரென போன் போட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப்.. வரி பதற்றத்திற்கு நடுவே பேசியது என்ன?
டெல்லி: இந்தியாவுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவிதம் வரி விதித்ததால் இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் போக்கு ஏற்பட்டுள்ளது. இந்தியாவை வரி அரசன் என்றெல்லாம் கடுமையாக விமர்சித்து வந்த டிரம்ப், இந்திய பிரதமர் மோடிக்கு போன் செய்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த உரையாடலில்ன் போது பிரதமர் மோடியை டிரம்ப் வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.
அமெரிக்கா பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக கூறிய டிரம்ப் இந்தியா மீது பரஸ்பர வரி விதித்தார். இது ஒருபுறம் இருக்க ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலும் 25 சதவீதம் வரியை டிரம்ப் விதித்தார்.

மோடிக்கு போன் செய்த டிரம்ப்
இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக அமெரிக்காவின் மொத்த வரி விதிப்பு 50 சதவீதமாக உள்ளது. இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய இந்த வரி போரால் இந்தியாவில் பல்வேறு பொருட்களின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டன. இதனால், அமெரிக்கா மீது கடும் அப்செட்டில் (அதிருப்தியில்) இந்தியா இருந்து வருகிறது.
இந்த நிலையில்தான் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பிரதமர் மோடி தனது 75-வது பிறந்த நாளை நாளை கொண்டாட உள்ளார். பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மோடி, டிரம்ப் ட்வீட் பதிவு
இது தொடர்பாக தனது எக்ஸ் (முந்தைய ட்விட்டர்) தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி,
"உங்களைப் போலவே (டிரம்ப்), இந்தியா-அமெரிக்கா இடையேயான விரிவான சர்வதேச ஒத்துழைப்பை புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்ல முழு அர்ப்பணிப்புடன் உள்ளேன். உக்ரைன் மோதலில் அமைதியை ஏற்படுத்த முயற்சிக்கும் உங்கள் முயற்சிக்கு நாங்கள் ஆதரவு கொடுப்போம்" என பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் இந்த பதிவுக்கு பதிலளித்துள்ள டிரம்ப், பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசியதாகவும், மோடியின் சிறப்பான பணிகளுக்காக அவரை பாராட்டியதாகவும் பதிவிட்டுள்ளார். மேலும், உக்ரைன் - அமெரிக்கா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்தியா அளிக்கும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்ததாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
முக்கியத்துவம் பெற்ற தொலைபேசி உரையாடல்
அமெரிக்கா விதித்த வரி விதிப்பு காரணமாக, இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு மோசமாக பாதிக்கப்பட்டது. இந்தியாவை சமயம் கிடைக்கும் போதெல்லாம் டிரம்ப் விமர்சித்து வந்தார். இந்த நிலையில்தான் தற்போது பிரதமர் மோடி - டிரம்ப் இடையேயான இந்த பரஸ்பர தொலைபேசி உரையாடல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அமெரிக்காவின் வரி விதிப்பு காரணமாக, இந்தியா சீனாவுடன் நெருக்கம் காட்டத் தொடங்கியதால், டிரம்பிற்கு சொந்த நாட்டுக்குள்ளே எதிர்ப்பு கிளம்பியது. "இந்தியா மிகச் சிறந்த நட்பு நாடு" என்றும், தனது தனிப்பட்ட வணிக நலனுக்காக இந்தியாவுடனான நல்லுறவை சிதைப்பதாகவும் டிரம்புக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதல்
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யக்கூடாது என்றும், உக்ரைன் போரை நடத்தும் ரஷ்யாவுக்கு இந்தியாவின் கொள்முதல் பொருளாதார ரீதியில் வலிமை கொடுப்பதாகவும் விமர்சித்த டிரம்ப், இந்தியா மீது மேலும் வரி விதிக்கப்படும் என்ற ரீதியில் பேசி வந்தார்.
இதையடுத்து இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக பேச்சு ரத்து ஆன நிலையில், தற்போது மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது. இத்தகைய சூழலில்தான் டிரம்ப் - மோடி இடையேயான தொலைபேசி உரையாடல் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மோடிக்கு இன்று பிறந்தநாள்
பிரதமர் மோடி இன்று தனது 75-வது நாளை பிறந்த நாளை கொண்டாடுகிறார். மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட் பாஜக திட்டமிட்டுள்ளது. பிரதமர் மோடிக்கு பல்வேறு உலக தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
-
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
லாட் டவுன் வந்துருச்சு..கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கும் உலக நாடுகள்! பெட்ரோல், டீசலால் ஒர்க் ஃப்ரம் ஹோம் -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
Iran: அமெரிக்காவின் F18 போர் விமானத்தை குருவியை சுடுவது போல சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவம்.. வீடியோ! -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடிடுமே.. "போரை முடிவுக்கு கொண்டு வர ரெடி.." ஈரான் போட்ட 7 கண்டிஷன்கள் -
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications