Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவில் ரூ.10 உயரப்போகுது பெட்ரோல், டீசல் விலை? ஷாக் கொடுத்த மத்திய அமைச்சர்! என்ன மேட்டர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கும் ரஷ்யாவுக்கும் இடையே உக்ரைன் போர் விவகாரத்தில் மோதல் வெடித்துள்ளது. ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்குக் கூடுதல் வரி விதிக்கப்போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். டிரம்ப்பின் இந்த நடவடிக்கையால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் விலை ரூ.8 முதல் ரூ.10 வரை உயர வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்ற முதலே உலகப் பொருளாதாரத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் நடந்து வருகிறது. திடீர் திடீரென ரெசிப்ரோக்கல் வரி, உத்தரவுகள் என்று அவருடைய செயல்பாடுகள் சர்வதேச வர்த்தகத்தைப் பாதிப்பதாகவே இருக்கிறது. டிரம்ப்பின் செயல்பாடுகளைப் பார்த்தால் அவர் ஏதோ உலகிற்கே பாஸ் என்பது போல நடந்து கொள்கிறார். அமெரிக்காவின் பொருளாதாரத்தைக் காக்கிறேன் எனச் சொல்லிக் கொண்டு எடுக்கும் நடவடிக்கைகள் மற்ற நாடுகளுக்குச் சிக்கலாகவே இருக்கிறது.

Trump s Russia Oil Tariff Threat Could Hike India s Petrol Diesel Prices by Rs 8-10

டிரம்ப்

மற்றொரு பக்கம் உலக நாடுகளின் போர்களை முடிவுக்கு வருவதாகவும் சொல்லி டிரம்ப் தன்னை தானே புகழ்ந்து கொள்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது. மத்தியக் கிழக்கில் அமைதி திரும்பும் நிலையில், அவரது பார்வை இப்போது ரஷ்யா உக்ரைன் பக்கம் திரும்பியுள்ளது. உக்ரைன் உடனான போரை 50 நாட்களுக்குள் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று அவர் ஏற்கனவே ரஷ்யாவுக்கு அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், ரஷ்யா வழக்கம்போல டிரம்ப்பின் மிரட்டலைக் கண்டு கொள்ளவில்லை.

100% வரி

இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப், ரஷ்யா போரை நிறுத்தவில்லை என்றால், அதிகப்படியான வரிகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார். இது மட்டுமின்றி ரஷ்யாவுடன் வியாபாரம் செய்யும் நாடுகளுக்கு 100% வரி விதிக்கப்படும் எனவும் டிரம்ப் கூறியுள்ளார். ரஷ்யா உடன் இந்தியா, சீனா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளுக்கே அதிக வர்த்தகம் செய்யும் நிலையில், இந்த நாடுகளுக்கு அது பெரிய சிக்கலாகவே இருக்கும். அதேநேரம் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், இந்தியாவில் பெட்ரோல் விலை உயருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயரலாம்

ரஷ்யா இப்போது வரை தனது முடிவில் உறுதியாக இருக்கிறது. இதனால் டிரம்ப் மீண்டும் வரிகளை விதிக்கலாம். இந்தியா தனது தேவைகளில் 35-40% கச்சா எண்ணெய்யை ரஷ்யாவிலிருந்து தான் இறக்குமதி செய்கிறது. ஒருவேளை டிரம்ப் உத்தரவால் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் கிடைக்காமல் போனால் இந்தியா வேறு வழிகளைத் தேட வேண்டியிருக்கும். இதனால் கச்சா எண்ணெய் பற்றைக்குறை கூட ஏற்படலாம்.

உலகத் தேவையில் 10% எண்ணெய்யை ரஷ்யா தான் வழங்குவதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரி கூறுகிறார். இது தடைப்பட்டால் மற்ற 90 சதவீதத்தை தான் உலக நாடுகள் வாங்க வேண்டும். இதனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை 8 முதல் 10 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது.

இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவை

இந்தியா தனது எண்ணெய் தேவையில் 88% இறக்குமதி தான் செய்கிறது. ரஷ்யாவின் மொத்தக் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 38% இந்தியாவிற்கு வருகிறது. 2022ல் உக்ரைன் போர் தொடங்குவதற்கு முன்பு, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா 2 சதவீதத்திற்கும் குறைவான கச்சா எண்ணெய்யை மட்டுமே இறக்குமதி செய்திருந்தது. போர் தொடங்கிய பிறகு, ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளால் உலக நாடுகள் ரஷ்யா எண்ணெய்யை வாங்கவில்லை. ஆனால், இந்தியா இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் எண்ணெய்யை வாங்கி குவித்து வருகிறது.

இந்தியா நடுநிலை

அமெரிக்கா ரஷ்யா இடையேயான இந்த விவகாரத்தில் இந்தியா நடுநிலையாக இருக்கவே விரும்புகிறது. இதனால் அமெரிக்கா தடை விதித்தால் அதற்கு மாற்று திட்டம் தயாராக இருப்பதாக அமைச்சர் ஹர்தீப் பூரி கூறியுள்ளார். முன்னதாக இந்தியா 27 நாடுகளிலிருந்து எண்ணெய் வாங்கி வந்த நிலையில், தற்போது 40 நாடுகளிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+