விஜய் டெல்லி போனது தெரியும்.. திரிஷா மும்பை போனது தெரியுமா.. இறுதியாகும் கூட்டணி.. தவெகவில் டிவிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு இன்று மாலை வெளியாகவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சியும் களத்தில் சுழன்று கொண்டிருக்கிறார்கள். தவெகவை தங்கள் கூட்டணியில் இழுப்பதற்கு பாஜக நெருக்கடி கொடுத்து வருகிறது. கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணைக்காக விஜய் டெல்லியில் இருக்கிறார். நடிகை திரிஷா மும்பையில் இருப்பதாகவும், அங்கு பாஜக, ஆர்எஸ்எஸ் புள்ளிகளுடன் இருவரும் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

தவெக தலைவர் விஜய் கடந்த வருடம் செப்டம்பர் 27 ஆம் தேதி கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரம் பகுதியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்றார். அந்தக் கூட்டத்தில் ஏற்பட்ட திடீர் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். விஜய்யிடம் ஏற்கனவே 2 முறை டெல்லியில் விசாரணை நடத்தினார்கள்.

TVK Alliance

டெல்லி சென்ற விஜய்

இந்த வழக்கு விசாரணைக்காக விஜய் மூன்றாவது முறையாக விஜய் டெல்லி சென்றுள்ளார், சென்னையில் இருந்து நேற்று தனி விமானத்தில் விஜய், அவரின் உதவியாளர் ஜெகதீஷ், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், ஓட்டுநர் ராஜேந்திரன் உள்ளிட்ட ஏழு பேர் சென்றனர். விமானம் புறப்படுவதற்கு முன்பு நடந்த சோதனையில் மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இதன் காரணமாக 44 நிமிடங்கள் தாமதமாக விமானம் டெல்லி சென்றது. ஆனால் மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டதாக வெளியான தகவலுக்கு தவெக துணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். விஜய்யிடம் இன்று காலை 10 மணியளவில் இருந்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். நாளையும் இந்த விசாரணை தொடரும் என்று கூறப்படுகிறது.

கூட்டணி குறித்து கருத்து

டெல்லியில் விஜய் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் முக்கிய நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே மாவட்டச் செயலாளர்களை அழைத்து பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மூலம் கூட்டணியில் இணைவது குறித்து கருத்தும் கேட்டுள்ளனர். தொகுதி பங்கீடு, பதவி ஆகியவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

மும்மை சென்ற திரிஷா

இந்நிலையில், சத்தமே இல்லாமல் திரிஷா மும்பை சென்றுள்ளதாக கூறப்படுகிறது. விஜய் டெல்லி புறப்படுவதற்கு ஒரு நாளுக்கு முன்பாகவே, அதாவது நேற்று முன் தினமே திரிஷா அவசர பயணமாக மும்பைக்கு சென்றுள்ளார். அங்கு கடந்த 2 நாட்களாக திரிஷா பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை ரகசியமாக சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளாராம். இருவரும் சென்னை திரும்பி ஆலோசனை நடத்திய பிறகு கூட்டணி தொடர்பாக இறுதி முடிவு செய்வார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+