அமைச்சரவையில் இடம்பெற காங்கிரஸ்க்கு அழைப்பு விடுத்த விஜய்.. எத்தனை பேருக்கு கிடைக்கும்?
டெல்லி: விஜய்யின் அமைச்சரவையில் இடம் பெற தவெகவிடம் இருந்து அழைப்பு வந்துள்ளதாக கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். எத்தனை அமைச்சர்கள் இடம் பெற உள்ளனர் என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். கட்சியை பலப்படுத்த இதுவே சரியான நேரம் என ராகுல் காந்தி கூறியதாக கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார். இதன் மூலம் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவது உறுதி ஆகியுள்ளது.
தமிழ்நாடு எம்.பிக்களுடன் டெல்லி சென்று ராகுலை சந்தித்த பிறகு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இன்று காலை நாங்கள் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பார்த்தோம். எம்.எல்.ஏக்கள் கடினமாக உழைக்க வேண்டும். கட்சியை கட்டமைக்க வேண்டும் என்று கார்கே வலியுறுத்தினார். ராகுல் காந்தியை சந்தித்தோம். விரிவான ஆலோசனை நடைபெற்றது. கட்சியை பலப்படுத்த இதுவே சரியான நேரம் என்றார் ராகுல் காந்தி.
அமைச்சரவையில் இடம் பெற தமிழக வெற்றிக் கழகம் எங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. எத்தனை அமைச்சர்கள் இடம் பெற உள்ளனர் என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்' என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் 5 எம்.எல்.ஏக்கள் உள்ள நிலையில், அக்கட்சி சார்பில் 2 பேருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்று 4 நாட்களுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில், இன்னும் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்படவில்லை.
அதேபோல, அமைச்சரவை விரிவாக்கம் பற்றிய அறிவிப்பும் இடம் பெறவில்லை. அமைச்சரவையை இறுதி செய்ய முடியாமல் தவெக தடுமாறுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ள சூழலில்தான் விரைவில் அமைச்சரவை பட்டியல் வெளியாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற உள்ள நிலையில் தமிழ்நாட்டில் மீண்டும் கூட்டணி ஆட்சி அமைய உள்ளது.
தமிழகத்தில் கடந்த 1952 ஆம் ஆண்டில் இருந்தே கூட்டணி ஆட்சியே கிடையாது. ஆனால் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மூலம் தற்போது கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. மத்தியில் பொறுத்தவரை, 1977ல் முதல் முறையாக கூட்டணி ஆட்சி அமைந்தது. பிறகு 1989 முதல் 2014 வரை மத்தியில் கூட்டணி இன்றி ஆட்சியே நடக்கவில்லை.












Click it and Unblock the Notifications