கரூர் துயர சம்பவத்திற்கு ஆஜரான விஜய்! சிபிஐ ஆபீஸ் வாசலில் TVK கோஷம் போட்ட ரசிகர்களால் அதிர்ச்சி
டெல்லி: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராகி விளக்கம் அளித்து வரும் நிலையில் அலுவலகத்தின் வெளியே கொஞ்சம் கூட விஷயத்தின் வீரியம் புரியாமல் TVK, TVK, தளபதி என தவெக கொடியை காட்டி தொண்டர்கள் ஆரவாரம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பொதுக் கூட்டம் நடத்தினார். அப்போது அவரை பார்க்க கூட்டத்தினர் முண்டியடித்த போது அங்கு நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். ஏராளமானோர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தை உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்பி, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 500-க்கும் மேற்பட்ட உள்ளிட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அதுபோல் கட்சி நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், மதியழகன் ஆகியோரிடம் 3 நாட்களாக டெல்லி சிபிஐ விசாரணை நடத்தியிருந்தது.
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. அதன் பேரில் விஜய் இன்று டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். காலை 11.30 மணிக்கு உள்ளே சென்ற விஜய்யிடம் இன்னும் விசாரணை தொடர்ந்து வருகிறது.
இவ்வாறு கட்சியின் தலைவர் விஜய் ஒரு துயரமான சம்பவத்தின் விசாரணைக்காக ஆஜராகியுள்ள நிலையில் வெளியே கூடிய தவெகவினர், கையில் தவெக கொடியை ஏந்தி, TVK, TVK, அண்ணன் யாரு , தளபதி என சிரித்தபடியே கோஷமிட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
எங்கு ஆரவாரம் செய்ய வேண்டும், எங்கு அமைதி நிலையை கடைபிடிக்க வேண்டும் என்ற வித்தியாசம் கூட தெரியாமல் இவர்கள் இப்படி கத்திக் கொண்டிருந்தது பார்ப்போரையும் கரூர் சம்பவம் குறித்து விஷயம் தெரிந்திருந்தவர்களையும் அதிர வைத்தது. இவர்களை தற்குறி என அழைத்து வருவதற்கு விஜய் அத்தனை கோபப்பட்டாரே, ஆனால் அவர்களை அப்படி அழைப்பது சரிதான் என்பதை இன்று சிபிஐ அலுவலகத்தின் வெளியே சொல்லாமல் சொல்லிவிட்டனர் தவெகவினர்.
-
“தவெக ஆட்சி அமைந்ததிலிருந்து கமிஷன், கரெப்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை”.. விஜய்யை புகழ்ந்த வைகோ! -
இடைத்தேர்தலில் களமிறங்கும் வைகோ? முதல்வர் விஜய் உடன் சந்திப்பு.. நெருங்கும் மதிமுக - தவெக! -
எகிறும் எதிர்பார்ப்பு! ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை! -
விஜய் உடன் அமைச்சர் கீர்த்தனா சந்திப்பு.. கூட யாருன்னு பாருங்க..! -
இனி கோவில்களில் உள்ள கடைகளில் அதிக விலைக்கு விற்றால் அபராதம், உரிமம் ரத்து.. அறநிலையத்துறை அதிரடி! -
கோயில் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடு.. விலைப்பட்டியல் கட்டாயம்.. அமைச்சர் ரமேஷ் உத்தரவு -
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
சிரிக்க கூட முடியாத அளவிற்கு.. அப்செட்டான விஜய்.. மனசை குடையும் 2 விஷயங்கள்! என்ன நடந்தது? -
தவெக அரசுக்கு எதிராக நூதன போராட்டம்... முதல்வருக்கு பார்சலில் அனுப்பிய ஹியரிங் எய்டு! -
ஓசூர்-க்கு ஓடிவந்த இஸ்ரேல் நிறுவனம்.. ஈரான் போருக்கு நடுவில் சூளகிரி-யில் மாஸ்டர் பிளான்! -
ஜானை அனுப்புறேன்.. ராகுலிடம் சொன்ன விஜய்! தவெகவின் ரகசிய ஆயுதம் ஜான் ஆரோக்கியசாமி டெல்லி செல்கிறார்











Click it and Unblock the Notifications