டூல்கிட் சர்ச்சை.. மேலும் 5 பாஜக தலைவர்களின் டிவிட்களுக்கு.."Manipulated" முத்திரை குத்திய டிவிட்டர்
டெல்லி: டூல்கிட் தொடர்பான சர்ச்சையில் மேலும் 5 பாஜக தலைவர்களின் டிவிட்களில் டிவிட்டர் நிறுவனம் "Manipulated" டேக் என்ற முத்திரையை குத்தியுள்ளது. அதாவது இவர்கள் செய்த டிவிட்கள் தவறான தகவல்களை, செய்திகளை, வழிகாட்டுதல்களை கொண்டு இருப்பதாக டிவிட்டர் கூறியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலை மத்திய அரசு எதிர்கொண்ட விதம் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது.கும்பமேளா நடத்தப்பட்டது தொடங்கி பிரதமர் மோடி சரியாக திட்டங்களை வகுக்காதது வரை பல விஷயங்கள் பாஜகவிற்கு எதிராக திரும்பி உள்ளது.
இதை காங்கிரஸ் மட்டுமின்றி பொது மக்கள் பலர் டிவிட்டரில் விமர்சனம் செய்து வருகிறார்கள். ஆனால் காங்கிரஸ் இதற்கு என்று டூல் கிட் ஒன்றை உருவாக்கி பாஜகவை பொய்யாக விமர்சித்து வருவதாக பாஜக, இந்த விஷயத்தை மடைமாற்றி வருகிறது.

பொய்
அதாவது மோடி, அமித் ஷா, நிர்மலா சீதாராமனை டிவிட்டரில் விமர்சிக்க வேண்டும், கும்பமேளாவை டிவிட்டரில் விமர்சிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் செயல்திட்டங்கள் அடங்கிய டூல் கிட் ஒன்று உருவாக்கப்பட்டு, அது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பரப்பப்ட்டதாக பாஜக சார்பாக புகார் வைக்கப்பட்டுள்ளது. பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா உள்ளிட்ட பல பாஜக தலைவர்கள் இந்த டூல் கிட்டை வெளியிட்டு இருந்தனர்.

சம்பித் பத்ரா
ஆனால் காங்கிரஸ் கட்சியோ, இப்படி உலவும் டூல்கிட் பொய்யானது என்றது விளக்கம் அளித்தது. அதோடு காங்கிரஸின் பழைய லெட்டர்பேடை மாற்றி, இப்படி டூல் கிட் போல சித்தரித்து பரப்புவதாக புகார் வைக்கப்பட்டது. அதோடு சம்பித் பத்ரா உள்ளிட்டோர் மீது காங்கிரஸ் கட்சி டெல்லி போலீசில் புகார் கொடுத்துள்ளது. இதனடிப்படையில் ஜேபி நட்டா, சம்பித் பத்ரா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

டிவிட்
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பாக இது குறித்து டிவிட்டரில் புகார் வைக்கப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து சம்பித் பத்ராவின் டூல் கிட் டிவிட்டில் "Manipulated" டேக் என்ற முத்திரையை டிவிட்டர் குத்தியுள்ளது. அதாவது இவர் செய்த டிவிட்கள் தவறான தகவல்களை, செய்திகளை, வழிகாட்டுதல்களை கொண்டு இருப்பதாக டிவிட்டர் கூறியுள்ளது. பொதுவாக பொய்யான டிவிட்க்கள், தவான் தகவல் அடங்கிய டிவிட்டில் இப்படி முத்திரை குத்தப்படும்.

கோரிக்கை
இது மட்டுமின்றி இன்னும் சில தலைவர்களின் கணக்கில் இதேபோல் முத்திரை குத்தப்பட்டது. மத்திய அரசு இதை பார்த்து கொதித்து போய், டிவிட்டரிடம் இதை நீக்கும்படி கூறியது. டூல் கிட் விவகாரம் குறித்து போலீசார் விசாரிக்கும் போது டிவிட்டர் இப்படி முன்முடிவுகளோடு "Manipulated" டேக் போடுவது தவறு. இது ஒரு தலைப்பட்சமானது. உடனே பாஜக தலைவர்களின் டிவிட்களில் போடப்பட்டுள்ள "Manipulated" டேக்கை நீக்கிவிட்டு, டிவிட்டர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று மத்திய அரசு சார்பாக கடிதம் அனுப்பப்பட்டது.

நீக்கவில்லை
ஆனால் மத்திய அரசின் கோரிக்கையை ஏற்காத நிலையில், தற்போது மேலும் 5 பாஜக தலைவர்களின் டிவிட்களில் டிவிட்டர் நிறுவனம் "Manipulated" டேக் என்ற முத்திரையை குத்தியுள்ளது. பாஜகவின் ப்ரீத்தி காந்தி, ஆந்திர பிரதேச பாஜக தலைவர் சுனில் தியோதர், சாரு பிரக்யா, டெல்லி பாஜக தலைவர் குல்ஜீத் சிங் சாகல், எம்பி வினய் சஹஸ்ரூபித்தே ஆகியோர் செய்த் டூல்கிட் டிவிட்களிலும் டிவிட்டர் நிறுவனம் "Manipulated" டேக் என்ற முத்திரையை குத்தியுள்ளது. மத்திய அரசின் கோரிக்கையையும் மீறி டிவிட்டர் மீண்டும் இப்படி செய்துள்ளது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications