டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முடக்கம் செய்யப்பட்ட... விவசாயிகள் போராட்டம் தொடர்பான டுவிட்டர் கணக்கு மீண்டும் மீட்டெடுப்பு!

Google Oneindia Tamil News

டெல்லி: டுவிட்டர் நிறுவனத்தால் முடக்கம் செய்யப்பட்ட டெல்லி போராட்டத்தில் தொடர்புடைய பல்வேறு டுவிட்டர் கணக்குகளை டுவிட்டர் சில மணி நேரங்களில் மீண்டும் மீட்டெடுத்தது

டெல்லி போராட்டத்தில் தொடர்புடைய 250 டுவிட்டர் கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் நேற்று முன்தினம் முடக்கியது. மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவின்பேரில் டுவிட்டர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

Twitter restores blocks accounts linked to farmers protest

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் பேரணியின்போது அசாம்பாவித சம்பவம் ஏற்பட்டது கடும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதுபோன்ற சம்பவம் மீண்டும் அரங்கேறாமல் இருக்க, எல்லைப் பகுதியில் அதிக அளவிலான போலீசாரும், பாதுகாப்புப் படையினரும் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் #ModiPlanningFarmerGenocide என்ற ஹேஷ்டேக் மூலம் ட்வீட் அல்லது ரீட்வீட் செய்த கணக்குகளை ட்விட்டர் திங்களன்று முடக்கியது. அதாவது ஆத்திரமூட்டும் பதிவுகளை வெளியிட்ட, 250 டுவிட்டர் கணக்குகளையும், அந்த பதிவுகளையும், டுவிட்டர் நிர்வாகம், நேற்று முன்தினம் முடக்கியது. "போலி செய்திகள், வன்முறையை தூண்டும் ட்வீட்கள்" கொண்ட கணக்குகளை முடக்குமாறு உள்துறை அமைச்சகம் மற்றும் சட்ட அமலாக்க நிறுவனங்களிடமிருந்து இந்த கோரிக்கை வந்ததை அடுத்து, டிவிட்டர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

அரசியலில் புது ஸ்டைல்.. புதுசு புதுசாக வரும் 'அந்த' வீடியோக்கள்.. விழிபிதுங்கும் எம்எல்ஏக்கள்! அரசியலில் புது ஸ்டைல்.. புதுசு புதுசாக வரும் 'அந்த' வீடியோக்கள்.. விழிபிதுங்கும் எம்எல்ஏக்கள்!

விவசாய சங்கங்களின் முக்கிய தலைவர்களின் ட்விட்டர் கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது. இதனை தொடர்ந்து சில மணி நேரங்களில் முடக்கம் செய்யப்பட்ட பல்வேறு டுவிட்டர் கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் மீட்டெடுத்தது. முடக்கி வைக்கப்பட்ட பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவர்களின் டுவிட்டர் கணக்குகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.

English summary
Twitter retrieves various Twitter accounts related to the Delhi protests that were frozen by Twitter within hours
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X