டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமித் ஷா புகைப்படத்தை முடக்கி வைத்த டுவிட்டர்.. வெடித்த சர்ச்சை

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் டிஸ்ப்ளே படத்தை, டுவிட்டர் முடக்கி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

உள்துறை அமைச்சர் அமித் ஷா, டுவிட்டரிடமிருந்து அதிகாரபூர்வ அக்கவுண்ட் என்பதற்கான ப்ளூடிக் மார்க் வாங்கிய அக்கவுண்ட் வைத்துள்ளார். ஆனால் யாரோ அந்த டிஸ்ப்ளே புகைப்படத்துக்கு உரிமை கொண்டாடியதாகவும், இதனால் ட்விட்டர் அவரது படத்தை காண்பிக்காமல் சில நிமிடங்கள் முடக்கி வைத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் சற்று நேரம் கழித்து அமித் ஷா புகைப்படம் டிஸ்பிளேயில் தென்படத் தொடங்கியுள்ளது.

2 வருடமாக சிறை வாசம்.. 81 வயதாகும் சமூக ஆர்வலர் வரவர ராவுக்கு மும்பை ஹைகோர்ட் ஜாமீன் மறுப்பு2 வருடமாக சிறை வாசம்.. 81 வயதாகும் சமூக ஆர்வலர் வரவர ராவுக்கு மும்பை ஹைகோர்ட் ஜாமீன் மறுப்பு

Twitter restores profile photo of Union Home Minister Amit Shah

முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமியின் டுவிட்டர் கணக்கில் உள்ள புகைப்படமும் இதுபோல முடக்கப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டுள்ள லடாக்கில் உள்ள லே பகுதியை, ஜம்மு-காஷ்மீரின் ஒரு பகுதியாக காண்பித்தது டுவிட்டர். இதையடுத்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ட்விட்டர் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது. தவறான வரைபடத்தை காண்பிப்பதன் மூலம் இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டை டுவிட்டர் அவமதித்து உள்ளது. அதன் பிரதிநிதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை ஏன் எடுக்கக் கூடாது என்று அந்த நோட்டீஸில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

5 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ட்விட்டர் புகைப்படம் நீக்கப்பட்டு சர்ச்சையாகி உள்ளது.

English summary
Twitter restores profile photo of Union Home Minister Amit Shah's account, earlier it had removed the photo over claims in “response to a report from a copyright holder”.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X