புது பிரச்சினை.. பரவும் "ஹாங்காங்" காய்ச்சல்! H3N2 இன்புளூயன்சா காய்ச்சலால் இந்தியாவில் இருவர் பலி
நாடு முழுக்க இப்போது H3N2 இன்புளூயன்சா காய்ச்சல் பரவி வருகிறது.
டெல்லி: நாடு முழுக்க கடந்த சில மாதங்களாகவே H3N2 இன்புளூயன்சா காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் இன்புளூயன்சா காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதாகப் பரபர தகவல் வெளியாகியுள்ளது.
நமது நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில காலமாகவே H3N2 இன்புளூயன்சா காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. தமிழ்நாட்டிலும் கூட பல பகுதிகளில் இந்த H3N2 இன்புளூயன்சா காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே கொரோனா பாதிப்பு இரண்டு ஆண்டுகளை காலி செய்துவிட்டது. அதில் இருந்தே இப்போது தான் நாம் போராடி வந்துள்ள நிலையில், இப்போது மீண்டும் இன்புளூயன்சா காய்ச்சல் பரவுகிறது.

இருவர் உயிரிழப்பு
இந்நிலையில், நாடு முழுக்க பரவும் இந்த H3N2 இன்புளூயன்சா காய்ச்சலால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இந்த H3N2 இன்புளூயன்சா காய்ச்சல் காரணமாக ஹரியானாவில் ஒருவர், கர்நாடகாவில் மற்றொருவர் என்று இருவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் H3N2 இன்புளூயன்சா காய்ச்சல் அதிகரித்து வருகிறது. அதேபோல நாடு முழுக்க எச்1என்1 வைரஸால் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஹாங்காங் காய்ச்சல்
நாட்டில் காய்ச்சல் பாதிப்புகள் சில காலமாகவே தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பெரும்பாலான நோய்த்தொற்றுகள் H3N2 வைரஸால் ஏற்படுகின்றன.. இது "ஹாங்காங் காய்ச்சல்" என்றும் அழைக்கப்படுகிறது. இப்போது வரை இந்தியாவில் இதுவரை H3N2 மற்றும் H1N1 தொற்றுகள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன. இதனால் உயிரிழப்புகள் எதுவும் பெரிதாக ஏற்படாது என்று சொல்லப்பட்ட நிலையில், இருவர் உயிரிழந்துள்ளது பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

அறிகுறி என்ன
இதில் H3N2 வைரஸ் மற்ற துணை வேரியண்ட்களை காட்டிலும் வேகமாகப் பரவுகிறது. மேலும், அதிகப்படியான நோயாளிகள் மருத்துவமனையில் அட்மிட் ஆகவும் காரணமாக இருக்கிறது. இந்த பாதிப்பு ஏற்படும் போது நமக்குக் குறிப்பிட்ட அறிகுறிகள் இருக்கும். பொதுவாகக் காய்ச்சலுடன் இடைவிடாத இருமல் இருக்கும். இந்த அறிகுறிகள் சில காலம் மட்டுமே இருக்கும். இரண்டு, மூன்று நாட்கள் ரெஸ்ட் எடுத்தால் அதுவாகவே சரியாகிவிடும். ஆனால், சமீப காலங்களால் தங்களுக்கு நீண்ட காலம் அறிகுறிகள் இருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.

ஆபத்தா
இந்த விவகாரம் குறித்து டாக்டர் அனிதா ரமேஷ் கூறுகையில், "இன்ஃப்ளூயன்ஸாவின் இந்த புதிய வகை நோயாளிகளில் சிலருக்குச் சுவாச பிரச்சனைகள் ஏற்படுகிறது. சில அறிகுறிகள் கோவிட் போலவே இருக்கின்றன.. இருப்பினும் டெஸ்ட் எடுத்தால் அவர்களுக்கு கோவிட் இல்லை என்றே வருகிறது.. இன்ஃப்ளூயன்ஸா நோயால் நமக்குப் பெரியளவில் பாதிப்பு இல்லை.. இருந்தாலும் அறிகுறி தொடர்ந்தால் உடனடியாக மருத்துவரைச் சென்று பார்க்க வேண்டும்" என்றார். அதேபோல ஐசிஎம்ஆர் அமைப்பும் இது தொடர்பாகப் பொதுமக்களுக்கு அட்வைஸ் வெளியிட்டுள்ளது.

அறிவுறுத்தல்
இருமல், சளி பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஆன்டிபாயாடிக்ஸ் மாத்திரைகளை மருத்துவர் அறிவுறுத்தல் இல்லாமல் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. மேலும், அறிகுறிக்குத் தேவையான மருந்துகளை பரிந்துரைக்க வேண்டும் என்றும் ஆன்டிபயாடிக்ஸை தவிரக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தேவையில்லாத சமயங்களில் ஆன்டிபயாடிக்ஸ் எடுத்துக் கொண்டால், பின்னர் தேவையான சமயங்களில் எடுத்துக் கொள்ளும் போது, அது பலன் தராது என்பதால் மருத்துவ சங்கம் இந்த அறிவுரை வழங்கியுள்ளது.

எப்படி பரவும்
அறிகுறிகள் தொடர்ந்தால் பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தியுள்ளனர். இந்த வைரஸ் வேகமாகப் பரவும் தன்மை கொண்டது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இருமல், தும்மல் மற்றும் பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பு மூலம் இது பரவுகிறது. இதன் காரணமாகப் பொதுமக்கள் கைகள் முறையாகக் கழுவ வேண்டும் என்றும் முறையாக மாஸ்க் அணிய வேண்டும் என்றும் வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் இடையே அதிக பாதிப்பு இருக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications