எங்க கொண்டு விட்டுருக்க பார்த்தியா? வீட்டின் மேற்கூரையில் லேண்ட் ஆன ஸ்கூட்டி! கலாய்த்த நெட்டிசன்ஸ்
டெல்லி: ஒரு வீட்டின் மேற்கூரையில் ஸ்கூட்டியோடு இரு இளம்பெண்கள் சிக்கி கொண்டு தவிக்கும் வீடியோ இணையத்தில் ட்ரென்ட் ஆகி வருகிறது. ஸ்கூட்டியை பார்க் செய்ய வேற இடமே கிடைக்கலயா என்ற ரீதியில் நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவுக்கு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சாலைகளில் செல்லும் பைக்குகளில் சாகசம் செய்து கொண்டு இபோதுள்ள தலைமுறையினர் பயணிப்பது அதிகம் காணப்படுகிறது. போலீசார் ஆங்காங்கே நின்று விதி மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதித்தாலும் போலீசார் இல்லாத இடங்களில் சாலைகளில் வீலிங் செய்வது.. ஹெல்மெட் இல்லாமல் செல்வது என போக்குவரத்து விதிகளை இஷ்டத்துக்கு மீறுவதை காண முடிகிறது. இதனால், அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொண்டு தங்கள் இன்னுயிரையும் இளைஞர்கள் பறிகொடுக்கிறார்கள்.

இந்தியாவில் சாலை விபத்துக்களில் அதிக உயிரிழப்பு ஏற்படுவது இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள்தான் என்று தரவுகள் கூறுகின்றன. இதனால் ஹெல்மெட் அணிந்து கொண்டு செல்வது அனுமதிக்கப்பட்ட வேகத்தை மீறாமல் பயணிக்க வேண்டும் என்ற சாலை விழிப்புணர்களை போலீசர் அவ்வப்போது ஏற்படுத்தினாலும் தினமும் சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறிய படி இளைஞர்கள் பலரும் பயணிப்பதை பார்க்க முடிகிறது.
மேற்கூரையில் பாய்ந்த ஸ்கூட்டி: அவ்வப்போது இதுபோன்று சாலை விதிகளை மீறும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகும். அந்த வகையில், தற்போது சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகிறது. அந்த வீடியோவில், இரண்டு இளம்பெண்கள், ஒரு ஓட்டு வீட்டின் மேற்கூரையில் பைக்கோடு சேர்ந்து விழுந்து கிடக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஸ்கூட்டி ஒன்றில் இரு இளம்பெண்கள் வந்து கொண்டு இருந்துக்கிறார்கள்.
பாலத்தில் வந்த போது அவர்கள் வந்த ஸ்கூட்டி, கட்டுப்பாட்டை இழந்து பாலத்திற்கு பக்கவாட்டில் இருந்த ஓட்டு வீட்டின் மேற்கூரையில் போய் விழுந்துள்ளது. இதில் பைக்கோடு பறந்த இரண்டு பெண்களும் வீட்டின் மேற்கூரையில் சிக்கிக் கொண்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. இரு இளம்பெண்கள் வீட்டின் மேற்கூரையில் இரு சக்கர வாகனத்தோடு விழுந்து கிடப்பதை பார்த்த அவ்வழியாக சென்ற மக்கள், விரைந்து சென்று இருவரையும் மீட்டுள்ளனர்.
நெட்டிசன்கள் கருத்து: இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் கலாய்க்கும் விதமாக பதிவிட்டு வருகிறார்கள். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், கூகுள் மேப்ஸ்களை நம்ப வேண்டாம் என்று சொன்னால் கேட்கிறீர்களா? என பதிவிட்டுஇருக்கிறார்.
அதேபோல மற்றொரு நெட்டிசன் கூறுகையில், எங்களை விட வேறு யாராலும் இந்த மாதிரி பைக்கை பார்க் செய்ய முடியாது.. என ஸ்மைலி பதிவிட்டுள்ளார். இளம்பெண்கள் பாலத்தில் இருந்து விழுந்து வீட்டின் மேற்கூரையில் சிக்கி வெளியே வர போராடும் காட்சிகள் அடங்கிய வீடியோ இன்ஸ்டாகிரம் பக்கத்தில் இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications