உபி சம்பல்: மசூதியில் ஆய்வுக்கு எதிரான போலீசாருடனான வன்முறையில் 2 பேர் பலி- நீடிக்கும் பதற்றம்!
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் ஷாஜி ஜமா மசூதியை நீதிமன்ற உத்தரவுப்படி ஆய்வு செய்ய சென்ற அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்தது. மசூதி ஆய்வுக்கு எதிராக போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வன்முறை வெடித்ததில் பொதுமக்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நீடிக்கிறது.
உ.பி. சம்பல் ஷாஜி ஜமா மசூதியானது இந்து கோவிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் கட்டப்பட்டது; இது தொடர்பாக ஆய்வு நடத்த வேண்டும் என்பது வழக்கு.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சம்பல் ஷாஜி ஜமா மசூதியை ஆய்வு செய்வதற்காக அதிகாரிகள் குழு ஒன்றை அமைத்தும் உத்தரவிட்டது. இந்த குழுவினர் கடந்த 19-ந் தேதி மசூதிக்குள் சென்று ஆய்வு நடத்தியது. அப்போது மசூதி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரசு அதிகாரிகள் குழு ஒன்று சம்பல் ஷாஜி ஜமா மசூதியை ஆய்வு செய்ய சென்றது. அவர்களுக்கு பாதுகாப்பாக ஏராளமான போலீசாரும் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர்.
ஆனால் 300-க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் ஒன்று திரண்டு அரசு அதிகாரிகளின் ஆய்வுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும் அரசு அதிகாரிகள் மீது கற்களை வீசித் தாக்கினர்; அரசு அதிகாரிகள் வந்த வாகனங்கள், போலீசார் வாகனங்கள் தீ வைத்தும் எரிக்கப்பட்டன.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கலைந்து போகச் செய்ய கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்; இதற்கு பதிலாக பொதுமக்கள் தரப்பில் இருந்து சரமாரியாக போலீசார் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது; டயர்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டு வீதிகளில் வீசி எறியப்பட்டன. அப்போது நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச் சூடும் நடத்தினர்.
இதனையடுத்து அரசு அதிகாரிகள் குழு மசூதிக்குள் சென்று நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஆய்வு நடத்தியது. சம்பல் பகுதியில் நிகழ்ந்த இந்த வன்முறை சம்பவங்களில் 2 பேர் பலியாகி உள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications