சரித்திரத்திலேயே இல்லையே..2 ஆண்டுகளாக காலியாக இருக்கும் 2 நியமன ராஜ்யசபா எம்பி பதவிகளால் சர்ச்சை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ராஜ்யசபாவில் 2 நியமன எம்பி இடங்கள் 2022-ம் ஆண்டு முதல் காலியாக இருப்பது புது சர்ச்சையாக வெடித்துள்ளது.

நாடாளுமன்ற மேல்சபை, மாநிலங்களவை என அழைக்கப்படும் ராஜ்யசபாவில் மொத்தம் 245 இடங்கள் உள்ளன. தற்போது ராஜ்யசபாவில் எம்பிக்களின் மொத்த எண்ணிக்கை 238. 7 எம்பி இடங்கள் காலியாக உள்ளன. ஜம்மு காஷ்மீருக்கான 4 எம்பிக்கள், ராஜஸ்தானின் 1 எம்பி பதவி மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். எஞ்சிய 2 எம்பி பதவி இடங்கள் ஜனாதிபதியால் நியமனம் செய்யப்பட வேண்டும்.

Two nominated Rajya Sabha MP seats vacant from 2022

ராஜ்யசபா கட்சிகள் பலம்: ராஜ்யசபாவில் தற்போது அரசியல் கட்சிகளின் பலம்: பாஜக 93; காங்கிரஸ் 30; திரிணாமுல் காங்கிரஸ் 13; திமுக, ஆம் ஆத்மி தலா 10, பிஜூ ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலா 9, பிஆர்எஸ் 7, ஆர்ஜேடி 6, சிபிஎம் ஜேடியூ தலா 5, அதிமுக என்சிபி தலா 4, சமாஜ்வாதி சிவசேனா தலா 3, சிபிஐ-ஜேஎம்எம் தலா 2, நியமன எம்பிக்கள் 5. இதர சிறு கட்சிகள், சுயேட்சைகள் என மொத்தம் 18.

2022-ல் இளையராஜா உட்பட 5 எம்பிக்கள் நியமனம்: கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் மொத்த 7 நியமன எம்பி இடங்கள் காலியாகின. இதனைத் தொடர்ந்து பிடி உஷா, டிவி ஹெக்டே, விஜயேந்திர பிரசாத், இளையராஜா ஆகிய 4 பேர் 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் 2022- செப்டம்பர் மாதம் குலாம் அலியும் மொத்தம் 5 நியமன எம்பிக்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் 2022-ம் ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் இருந்து சுமார் 20 மாதங்களாக 2 நியமன எம்பிக்கள் இடங்கள் இதுவரை நியமிக்கப்படவே இல்லை. ராஜ்யசபா சரித்திரத்தில் இப்படி நியமன எம்பி பதவி இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது இல்லை எனவும் கூறப்படுகிறது.

ராஜ்யசபா எம்பிக்கள்: ராஜ்யசபாவின் நியமன எம்பிக்களுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்பிக்கான அனைத்து சலுகைகள், அதிகாரங்கள் உண்டு. ஆனால் ஜனாதிபதி தேர்தலில் மட்டும் அவர்களால் வாக்களிக்க முடியாது. அதே நேரத்தில் துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்குரிமை பெற்றவர்களாக இருக்கின்றனர். ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிற ஒரு எம்பி 6 மாதங்களில் ஒரு அரசியல் கட்சியில் இணையவும் முடியும். தற்போதைய ராஜ்யசபாவின் 10 நியமன எம்பிக்களில் 5 பேர் ஏற்கனவே பாஜகவிலேயே இணைந்தும் விட்டனர். இவர்களில் மகேஷ் ஜெத்மலானி, சோனல் மணிசிங், ராகேஷ் சின்ஹா, ராம் சாகல் ஆகியோரது பதவி காலம் வரும் ஜூலை மாதம் முடிவடைய உள்ளது. இருந்த போதும் 2 ஆண்டுகளாக 2 ராஜ்யசபா எம்பி பதவி இடங்கள் நிரப்பப்படாமலேயே இருந்து வருவதை எதிர்க்கட்சிகள் பிரச்சனையாக கிளப்பக் கூடும் எனவும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+