ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.. 2 வீரர்கள் உள்பட 4 பேர் உயிரிழப்பு
டெல்லி: ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லாவில் ராணுவ வாகனம் மீது பயங்கராவதிகள் மறைந்து இருந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உள்பட 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் காயம் அடைந்த மூன்று ராணுவ வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் குல்மர்க் பகுதி அருகே ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். பாரமுல்லா போடபத்ரி நோக்கி சென்று கொண்டிருந்த ராணுவ வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். எதிர்பாரத இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் இரண்டு பேர் வீர மரணம் அடைந்தனர்.

ராணுவத்துடன் சுமை தூக்கும் பணியாளர்களாக இருந்த பொதுமக்கள் இருவரும் பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலில் பலியாகியுள்ளனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. காயம் அடைந்த மூன்று ராணுவ வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பாகிஸ்தானின் பார்டர் ஆக்ஷன் குழு (BAT) உடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இதற்கு முன்பாக இந்த குழுவில் அங்கம் வகித்த பயங்கரவாதிகள் பலரும் எல்லை தாண்டிய தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிததுள்ளார். உமர் அப்துல்லா இது தொடர்பாக கூறியிருப்பதாவது:- வடக்கு காஷ்மீரின் போடபத்ரி பகுதியில் ராணுவ வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக மிகவும் துரதிர்ஷ்டவசமான செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன.
இதி சில உயிரிழப்புகளும் ஏற்பட்டு உள்ளன. காஷ்மீரில் சமீபத்தில் நடைபெறும் தாக்குதல்கள் மிகவும் கவலை அளிக்கிறது. இத்தகைய தாக்குதல்களுக்கு எனது கண்டனத்தை பதிவு செய்து கொள்கிறேன். தங்கள் நேசத்திற்கு உரியவர்களை இழந்து வாடும் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைந்து குணம் அடைய இறைவனிடம் பிரர்த்தனை செய்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications