பாகிஸ்தானிடம் சிக்காமல் லட்சத்தீவினை மீட்டது இரண்டு தமிழர்கள்.. பிரதமர் மோடியே பகிர்ந்த உண்மை
டெல்லி: கேரளா அருகே அரபிக் கடலில் யூனியன் பிரதேசமாக உள்ள லட்சத்தீவினை, சுதந்திரம் அடைந்த காலக்கட்டத்தில் பாகிஸ்தான் பிடியில் சிக்காமல் காப்பாற்றியது 2 தமிழர்கள் ஆவார். இதை பற்றி பிரதமர் நரேந்திர மோடியே, மனதின் குரல் நிகழ்ச்சியில் ஒரு முறை குறிப்பிட்டுள்ளார் என்பது இப்போது தெரியவந்துள்ளது.
இந்தியர்கள் பலர், குறிப்பாக நடிகர், நடிகைகள் பலர் விடுமுறைக்கு விரும்பி செல்லும் இடமாக மாலத்தீவு இருக்கிறது. ஆனால் மாலத்தீவு முன்பாக உள்ள நமது இந்திய பகுதியான லட்சத்தீவு மிகவும் அருமையான கடற்கரைகளை கொண்ட தீவு ஆகும். கேரளாவின் கொச்சினில் இருந்து கூப்பிடும் தூரத்தில் அமைந்திருக்கிறது லட்சத்தீவு. அங்கு 36 அழகிய தீவுகள் உள்ளன.

அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவுக்கு பயணித்து வந்தார். இது யூனியன் பிரதேசம் என்பதால் நேரடியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாகும். பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவில் கடலில் நீச்சல் அடித்தது, கடற்கரையை ரசித்தது போன்ற புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியானது. அதன் பின்னர் கூகுளில் அதிகம் தேடப்படும் இடமாக லட்சத்தீவு மாறியது.
இப்போது மாலத்தீவு விஷயத்திற்கு வருவோம். லட்சத்தீவு அருகில் உள்ள நாடு தான் மாலத்தீவு. மொத்த நாடும் சுற்றுலாவையே பிரதான தொழிலாக இருக்கிறது. இந்நிலையில் பிரதமர் மோடியின் பயணத்தால் லட்சத்தீவு மிகப்பெரிய சுற்றுலாதலமாக மாறும் என்ற அச்சத்தில் மாலத்தீவை சேர்ந்த அமைச்சர்கள் சிலர் பிரதமர் மோடியை அநாகரிகமாக விமர்சித்தார்கள். இதனால் சமூக வலைதளத்தில் சர்ச்சையாக வெடித்துள்ளது.
மாலத்தீவை புறக்கணிக்குமாறு சமூகவலைதளங்கள் வாயிலாக இந்தியர்கள் பலர் அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் மாலத்தீவு ஓட்டல்களில் இதுவரை பல ஆயிரம் முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மாலத்தீவுக்கு சுற்றுலா செல்லும் நாடுகள் பட்டியலை எடுத்தால் இந்தியர்கள் முதலிடத்தில் இருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவு சென்றது குறித்து செய்த தேவையற்ற விமர்சனத்தால் மாலத்தீவு பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.
இதனிடையே லட்சத்தீவு குறித்து பலரும் தேடி வருகிறார்கள். லட்சத்தீவில் என்ன பேமஸ், லட்சத்தீவில் உள்ள கட்டுப்பாடுகள் என்ன என்று பலரும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் லட்சத்தீவினை பாகிஸ்தானிடம் இருந்து பாதுகாத்தது இரண்டு தமிழர்கள் என்ற தகவல் இப்போது ஊடகங்களில் அதிகம் பகிரப்படுகிறது.
லட்சத்தீவு தீவினை பொறுத்தவரை முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதியாகும். இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசித்த லட்சத்தீவை கைப்பற்ற பாகிஸ்தான் முயற்சி மேற்கொண்டது. பாகிஸ்தான் கொடியுடன் ஒரு கப்பல் லட்சத்தீவுக்கு விரைந்த நிலையில், அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் உடனடியாக மைசூருக்கு போனில் அழைத்து விஷயத்தை கூறினார்.
மைசூரின் கடைசி திவானும் தமிழருமான ராமசாமி முதலியார் (நீதிக் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தவர்), அவரது தம்பி லட்சுமண சுவாமி (மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்தவர் ) ஆகியோர் சர்தார் படேலின் அறிவுறுத்தலின் படி, திருவிதாங்கூர் என்று அழைக்கப்பட்ட கேரளா போலீஸாரையும், கேரள மக்களை அழைத்து கொண்டு லட்சத்தீவுக்கு சென்று அங்கு இந்திய தேசிய கொடியை ஏற்றினார்கள். இந்த சூழலில் இந்திய கடற்படை போர்க்கப்பலும் லட்சத்தீவுக்கு பின்னாடியே விரைந்து வந்தது. இதன்மூலம் பாகிஸ்தான் பிடியில் சிக்காமல் லட்சத்தீவு தப்பியது. கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் 27-ம் தேதி ஒலிபரப்பான மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இந்த தகவலை கூறியிருக்கிறார்.
மேலும் அப்போது பிரதமர் நரேந்திர மோடி இன்று லட்சத்தீவு இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது. மிகச் சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இந்திய மக்கள் லட்சத்தீவுக்கு ஒருமுறையாவது சுற்றுலா செல்லவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications