இந்தியா மீதான வரியை குறைக்க திட்டம்! முடிவுக்கு வருகிறதா டிரம்ப் பிடிவாதம்? நாளை முக்கிய மீட்டிங்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள வரி கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. வரி விஷயத்தில் தீர்வு எட்ட இரு தரப்பும் பேச்சுவார்த்தையில் இறங்கியிருக்கின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் பிரெண்டன் லிஞ்ச், இந்தியாவின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் ராஜேஷ் அகர்வாலை சந்திக்க இன்று டெல்லி வருகிறார். நாளை நடக்கும் பேச்சுவார்த்தை வெற்றியடைந்தால் இந்தியா மீதான வரியை அமெரிக்க குறைப்பது பற்றி யோசிக்கும்.

இந்தியா மீதான அமெரிக்காவின் 50% இறக்குமதி வரி காரணமாக, இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் தடைபட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது.

US trade India

"அமெரிக்காவின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் இன்று இரவு இந்தியா வருகிறார். நாளை முழுவதும் பேச்சுவார்த்தைகள் நடைபெறும்" என்று அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளுக்கு இந்தியாவின் சார்பாக தலைமை தாங்கும் அகர்வால் செய்தியாளர் சந்திப்போது கூறியிருந்தார்.

"இது அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தை சுற்று அல்ல. ஆனால், இது நிச்சயமாக வர்த்தகப் பேச்சுவார்த்தையாகவும், இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தத்தை எட்ட எவ்வாறு செயல்படலாம் என்பது பற்றிய கலந்துரையாடலாகவும் இருக்கும்" என்றும் அவர் கூறினார்.

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தைகள் பல்வேறு மட்டங்களில் நடைபெற்று வருவதாகவும், பேச்சுவார்த்தைக் குழுக்கள் முதல், அமைச்சர்கள் மட்டம் வரை இத்தகைய கலந்துரையாடல்கள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் அகர்வால் விளக்கினார். இந்த தொடர் முயற்சியின் ஒரு பகுதியாகத்தான் நாளை பேச்சுவார்த்தை நடக்கிறது என்றும் அவர் கூறியிருந்தார்.

அமெரிக்க வரி காரணமாக சூரத், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வர்த்தகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆடை உற்பத்தி துறையில் இப்படி பாதிப்பு எனில், மறுபுறம் கடல் உணவு ஏற்றுமதியிலும் கடுமையான பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கடல் உணவுகளை ஏற்றிக்கொண்டு அமெரிக்கா கிளம்பிய கப்பல் ஒன்று திடீரென பாதி வழியில் திருப்பி அனுப்பப்பட்டது. இதற்கு வரிதான் காரணம். இப்படி பல தளங்களில் இந்தியா பாதிப்பை எதிர்கொண்டிருக்கும் நிலையில், நாளை நடக்கும் பேச்சுவார்த்தை இந்த பாதிப்புகளின் தீவிரத்தை குறைக்க உதவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+