வெறும் 3 மணி நேரம்.. உலக நாடுகள் உற்று கவனித்த அமீரக அதிபரின் இந்திய பயணம்.. ஏன் ரொம்ப முக்கியம்!
டெல்லி: ஐக்கிய அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் நேற்றைய தினம் சிறிய பயணமாக இந்தியாவுக்கு வந்தார். வெறும் 3 மணி நேரம் மட்டுமே அவரது இந்தியப் பயணம் இருந்தது. அவர் எதற்காக இந்தியாவுக்கு வருகை புரிந்தார். இந்த குறுகிய சந்திப்பு சர்வதேச அளவில் ஏன் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
இந்தியா ஐக்கிய அமீரகம் இடையே நீண்ட கலாமாகவே நல்லுறவு இருந்து வருகிறது. இதன் காரணமாகவே இந்தியர்கள் பல லட்சம் பேர் அமீரகத்தில் எந்தவொரு சிக்கலும் இல்லாமல் ஆண்டுக் கணக்கில் வேலை செய்து வருகிறார்கள். இதற்கிடையே ஐக்கிய அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் நேற்றைய தினம் சிறிய பயணமாக இந்தியாவுக்கு வந்தார்.

3 மணி நேரம்
வெறும் 3 மணி நேரம் மட்டுமே அவரது இந்தியப் பயணம் இருந்தது. இந்தியா- அமீரக உறவுகளை எடுத்துக் காட்டும் வகையில் ஷேக் சயீத்தை பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்றார். அப்போது இரு தலைவர்களும் அன்புடன் ஆரத்தழுவிக் கொண்டனர். இது தொடர்பான வீடியோவை பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, தனது சகோதரனை வரவேற்க ஏர்போர்ட் சென்றதாகப் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி
இது தொடர்பாகப் பிரதமர் மோடி தனது ட்விட்டரில் மேலும், "ஐக்கிய அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை வரவேற்க விமான நிலையம் சென்றேன். அவரது வருகை, இந்தியா- ஐக்கிய அமீரகம் இடையிலான வலுவான நட்புக்கு அவர் அளிக்கும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது" என்று பிரதமர் மோடி அந்தப் பதிவில் தெரிவித்தார். விமான நிலையத்தில் இருந்து இரு தலைவர்களும் ஒரே காரில் ஒன்றாகப் பயணம் செய்தனர்.
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான்- அமெரிக்க உறவுகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள், காசாவில் தொடரும் நிலையற்ற சூழல் மற்றும் சவுதி அரேபியா- ஐக்கிய அமீரகம் தொடர்புடைய ஏமன் விவகாரத்தில் தீர்வு இல்லாமல் இருப்பது என ஏகப்பட்ட புவிசார் குழப்பங்கள் இருக்கும் சூழலில், இந்த மூன்று மணி நேரப் பயணம் அமைந்துள்ளது. இதனால் அவை முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது.
இந்திய அமீரக உறவு
இந்தச் சந்திப்பு, பிரதமர் மோடி அழைப்பின் பேரில் நடந்ததாகவும் இரு நாடுகளுக்கும் இடையே சமீபத்திய பேச்சுவார்த்தைகள் மூலம் உறவு மிகச் சிறப்பாக இருப்பதாகவும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 2024இல் அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான், ஏப்ரல் 2025இல் ஐக்கிய அமீரகத் துணைப் பிரதமர், பாதுகாப்புத்துறை அமைச்சர், துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் ஆகியோர் இந்தியாவுக்கு வருகை தந்திருந்த நிலையில், இப்போது அமீரக அதிபரே வந்துள்ளார்.
இரு தலைவர்களுக்கும் இடையே முக்கிய ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. அதில் அணுசக்தி, செயற்கை நுண்ணறிவு, பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பைப் பலப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக எரிசக்தி பாதுகாப்பு முக்கிய இடம் பிடித்தது.
சமீபத்தில் தான் இந்தியாவின் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் அமீரகத்தின் அட்னாக் காஸ் நிறுவனங்களுக்கு இடையே 10 ஆண்டு கால LNG விநியோக ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி, 2028ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 0.5 மில்லியன் டன் LNGஐ இந்தியாவுக்கு அமீரகம் வழங்கும். இதன் மூலம் இந்தியாவின் மிகப் பெரிய LNG சப்ளையர்களில் ஒன்றாக அமீரகம் மாறும்!
ஏன் முக்கியம்
காசாவின் நிர்வாகத்திற்காக ஒரு அமைதிக் குழுவை அமைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் முயன்று வருகிறார். இதற்காக உலகில் சில குறிப்பிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா அழைப்பும் விடுத்துள்ளது. இது தொடர்பாகவும் ஆலோசனை நடந்து இருப்பதாக எனக் கூறப்படுகிறது. ஐக்கிய அமீரக அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு ஷேக் முகமதின் மூன்றாவது அதிகாரப்பூர்வ இந்தியப் பயணம் இதுவாகும். இது இந்தியாவுக்கும் அமீரகத்திற்கும் இடையே இருக்கும் உயர்மட்ட உறவையே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
-
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில்












Click it and Unblock the Notifications