டெல்லியில் சீதாராம் யெச்சூரி உடலுக்கு உதயநிதி அஞ்சலி! உடல் எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒப்படைப்பு
டெல்லி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று முன்தினம் காலமானார். இந்நிலையில் இன்று அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் யெச்சூரியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர் சீதாராம் யெச்சூரி, இவர் கடந்த 1952ம் ஆண்டு சென்னையில் பிறந்தார். படிக்கும் காலத்திலேயே இவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். மாணவர் சங்கம் மூலம், இடதுசாரி தத்துவத்தின்பால் ஈர்க்கப்பட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.

அவசர நிலை காலகட்டத்தின் போது ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் மாணவர் தலைவராக யெச்சூரி இருந்தார். எமெர்ஜென்சியை எதிர்த்து இவர் நடத்திய போராட்டங்கள் அக்காலத்தில் மாணவர்கள் மத்தியில் பெரும் கவனம் பெற்றிருந்தது. இதற்காகவே அவர் கைது செய்யப்பட்டார். வாழ்க்கையையே போராட்டங்களுக்காக அர்ப்பணித்திருந்த இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
நுரையீரலில் ஏற்பட்ட சுவாச தொற்று அவரை முடக்கி போட்டது. மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு, இடதுசாரி செயற்பாட்டாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யெச்சூரியின் மறைவுக்கு, பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ராகுல் காந்தி தனது x பக்கத்தில், “நம் நாட்டின் மீது தெளிவான புரிதல் கொண்டவர், அதன் கொள்கையை காப்பாற்ற நினைப்பவர். நமது நீண்ட உரையாடல்களை மிஸ் செய்வேன். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது x பக்கத்தில், “இடதுசாரி இயக்கத்தின் தலைவரும் இந்திய அரசியலில் தலைசிறந்த ஆளுமையுமான தோழர் சீதாராம் யெச்சூரியின் மறைவு ஆழ்ந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
தோழர் சீதாராம் யெச்சூரி அச்சமற்ற தலைவராக இருந்தவர். சிறு வயதிலிருந்தே மாணவர் தலைவராக தைரியமாக அவசரநிலைக்கு எதிராக குரல் கொடுத்தார். தொழிலாளி வர்க்கம், மதச்சார்பின்மை, சமூக நீதி, சமத்துவம் மற்றும் முற்போக்கான விழுமியங்கள் ஆகியவற்றிற்கான அவரது அர்ப்பணிப்பு எதிர்கால சந்ததியினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்.
அவருடன் நான் கொண்டிருந்த நுண்ணறிவான தொடர்புகளை நான் எப்போதும் போற்றுவேன். இக்கட்டான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். செவ்வணக்கம், தோழர்” என்று பதிவிட்டுள்ளார்.
யெச்சூரியின் உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டிருக்கிறது. இன்று அவரது உடலுக்கு சோனியா காந்தி, கார்கே என அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று யெச்சூரி உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இன்று மாலை யெச்சூரியின் உடல் எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒப்படைக்கப்படுகிறது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications