சிறப்பாக கையாண்டோம்.. உக்ரைன் போரால் பாஜகவுக்கு வெற்றி! அமைச்சர் அமித்ஷா சொன்னது என்ன?
டெல்லி: ‛‛உக்ரைன் பிரச்சனையை இந்தியா கையாளும் விதம் உத்தரபிரதேசம் சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு சாதகமாக அமையும். உத்தர பிரதேசம் உள்பட 5 மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெறும்'' என மத்திய அமைச்சர் அமித்ஷா கூறினார்.
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டன. இதில் உத்தரகாண்ட், கோவாவில் பிப்.,14, பஞ்சாப்பில் பிப்.,20ல் தேர்தல்கள் முடிவடைந்தன.
மணிப்பூரில் பிப்.,28ல் முதற்கட்ட தேர்தலும், மார்ச் 5ல் இரண்டாம் கட்ட தேர்தலும் நடைபெற்றது. உத்தரபிரதேசத்தில் 6 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளன. மார்ச் 7ல் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

தலைவர்கள் பிரசாரம்
இதில் பதிவான ஓட்டுக்கள் அனைத்தும் பிப்ரவரி 10ல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாக உள்ளன. இந்த தேர்தலையொட்டி பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்பட ஏராளமானவர்கள் தீவிர பிரசாரம் செய்தனர். காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, மூத்த தலைவர் ப சிதம்பரம் உள்ளிட்டவர்கள் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர். ஆம்ஆத்மி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சியினரும் சூறாவளி பிரசாரம் செய்தனர்.

பாஜகவுக்கு சாதகம்
இந்நிலையில் நேற்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் ‛‛உக்ரைன் போர், மாணவர்கள் மீட்பு விவகாரம் தேர்தலில் பாஜகவுக்கு ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா'' என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு அமித்ஷா பதிலளித்தார். அப்போது அவர் ‛‛உக்ரைன் நாட்டின் சூழல் குறித்து ஜனவரி முதல் இந்தியா உன்னிப்பாக கவனித்து வந்தது. பிரதமர் நரேந்திர மோடி முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு வருகிறார். உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு பிப்ரவரி 15ம் தேதியே அறிவுரை வழங்கப்பட்டது. தற்போது வரை விமானங்கள் மூலம் 13 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடக்கிறது. இது உத்தரபிரதேச தேர்தலில் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும்'' என்றார்.

5 மாநிலங்களிலும் வெற்றி
மேலும், ‛‛தேர்தல் நடக்கும் உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மாநிலங்களில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும். பஞ்சாப்பிலும் அமோக வெற்றி பெறும். உக்ரைனில் இந்தியர்களை மீட்க ரஷ்ய மொழி பேசும் குழுவை அதன் அண்டை நாடுகளுக்கு அனுப்பி உள்ளோம். கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது. மார்ச் 4ம் தேதி வரை 16 ஆயிரம் இந்தியர்களை உக்ரைனில் இருந்து தாயகம் அழைத்து வந்துள்ளோம்'' எனவும் கூறினார்.

ஆபரேஷன் கங்கா
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை இன்று 11வது நாளாக தொடர்கிறது. முன்னதாக போர் துவங்கியவுடன் உக்ரைனில் விமானநிலையங்கள் மூடப்பட்டன. இதனால் அங்குள்ள இந்தியர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதில் சிரமம் ஏற்பட்டது. உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியாவின் புக்காரெஸ்ட், ஹங்கேரியின் புத்தாபெஸ்ட், போலந்தின் ரிசோ, சுலோவாகியாவின் கோசிஸ் நகர்களில்ல இருந்து மாணவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இதற்கு ‛ஆபரேஷன் கங்கா' என பெயரிடப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர்களான ஹர்தீப் சிங் புரி ஹங்கேரியிலும், ஜோதிராதித்ய சிந்தியா ருமேனியாவிலும், கிரண் ரிஜிஜூ சுலோவாகியாவிலும், வி.கே.சிங் போலந்திலும் தங்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கான ஒருங்கிணைப்பு பணியை செய்து வருகின்றனர்.
Recommended Video

மாணவர்கள் கோரிக்கை
இருப்பினும் இன்னும் இந்திய மாணவர்கள் உக்ரைன் தலைநகர் கீவ், சுமி நகரங்களில் சிக்கி தவிக்கின்றனர். அங்கு போர் பதற்றம் அதிகம் உள்ளதால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே அங்குள்ள இந்திய மாணவர்கள் தங்களை மீட்கும்படி மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். உக்ரைனில் இதுவரை நடந்த தாக்குதலில் கர்நாடகம் ஹாவேரி மாவட்டத்தை சேர்ந்த நவீன் என்ற மாணவர் பலியாகி உள்ளார். டெல்லியை சேர்ந்த ஹர்ஜோத் சிங் என்பவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications