டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மெடிக்கல் மிராக்கிள்.. ஒரு மனுஷன் "இதை" எப்படி தொலைக்க முடியும்.. பேப்பரில் வந்த விளம்பரம்!

Google Oneindia Tamil News

டெல்லி: 'தனது இறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டதாக' அசாமில் உள்ள நாளிதழில் ஒருவர் விளம்பரம் வெளியிட்டுள்ளது தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. நெட்டிசன்களை தலை சுற்ற வைத்துள்ள இந்த விளம்பர பதிவுக்கு நெட்டிசன் ஒருவர் இறப்பு சான்றிதழ் கிடைத்துவிட்டால் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பதா?.. இல்லை நரகத்திற்கு அனுப்பி வைப்பதா?.. என்று கிண்டலடித்து டிவிட் பதிவிட்டுள்ளார்.

இணையதளங்களில் வினோதமான பல விஷயங்கள் கொட்டி கிடக்கின்றன. செல்லப்பிராணிகளின் குட்டிச்சேட்டைகள் முதல் வித்தியாசமான உணவுப்பண்டங்கள், அசாத்திய திறமைகள், நகைப்பூட்டும் அடாவடி செயல்கள் என இணையதளத்தில் பல சுவாரசிய வீடியோக்கள் கொட்டி கிடக்கின்றன.

அப்படித்தான் நெட்டிசன்களை திகைக்க வைக்கும் வகையில் ஒரு பதிவு சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.

என்னதான் இருக்கு..

என்னதான் இருக்கு..

சான்றிதழ்கள் தொலைந்துவிட்டால் அது குறித்த விளம்பரங்கள் நாளிதழ்களில் வெளியாகி இருப்பதை நாம் பலரும் பார்த்து இருக்கிறோம். பிறந்த நாள், திருமண அழைப்பு, துக்க செய்திகள் கூட நாளிதழ்களில் விளம்பரங்களாக வெளியாகி இருக்கிறது. ஆனால் ஒருவர் தனது இறந்த சர்டிபிகேட் தொலைந்து விட்டது என நாளிதழில் விளம்பரம் வெளியிட்டுள்ளதான் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவில் மட்டுமே இது நடக்கும்

இந்தியாவில் மட்டுமே இது நடக்கும்


அசாமில் உள்ள நாளிதழில் கடந்த 7 ஆம் தேதியிட்டு வெளியான விளம்பரத்தில், ஒருவர் தனது இறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டது. லும்டிங் பசார் பகுதியில் காலை 10 மணியளவில் இந்த சான்றிதழ் தொலைந்துவிட்டது. என்ற விவரங்களுடன் விளம்பரம் இடம் பெற்றுள்ளது. இறப்பு சான்றிதழின் சீரியல் எண்ணும் வெளியிடப்பட்டுள்ளது. ஐபிஎஸ் அதிகாரி ரூபின் சர்மா இந்த விளம்பரத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்து இருக்கிறார். விளம்பரம் இடம் பெற்றிருந்த பேப்பர் கட்டிங்கை பகிர்ந்து இருக்கும் அவர், இந்தியாவில் மட்டுமே இது நடக்கும் என்ற கேப்ஷனோடு ஸ்மைலியையும் பதிவிட்டுள்ளார்

விண்ணுலகில் இருந்து உதவி கோருகிறார்

விண்ணுலகில் இருந்து உதவி கோருகிறார்

இந்த பதிவுக்கு கீழே நெட்டிசன்கள் பலரும் பதிவிட்டுள்ள கருத்துதான் மேலும் சுவாரசியமாக உள்ளது. நெட்டிசன் ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில், ''விண்ணுலகில் இருந்து இந்த நபர் உதவி கோருகிறாரா''.. என்று கேட்டுள்ளார். இன்னொரு நெட்டிசன் வெளியிட்டுள்ள கருத்தில், சான்றிதழை கண்டுபிடித்தால் சொர்க்கத்திற்கு அனுப்ப வேண்டுமா?.. அல்லது நரகத்திற்கு அனுப்ப வேண்டுமா?.. எனக்கேட்டுள்ளார். முதல் முறையாக யாரோ ஒருவர் தனது இறப்புசான்றிதழை தொலைத்துவிட்டார் என்று ஒருவர் கேலியாக பதிவிட்டு இருக்கிறார்.

தவறுதலாக பிரிண்ட்?

தவறுதலாக பிரிண்ட்?

எனினும், இந்த விளம்பரம் தவறுதலாக அவருடைய இறப்பு சான்றிதழ் என்று பிரிண்ட் ஆகியிருக்கலாம் என்று சில நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளார். வழக்கமாக சான்றிதழ் தொலைந்துவிட்டால் நாளிதழ்களில் விளம்பரம் கொடுக்கும் நடைமுறை இருந்து வருவதால், அப்படி யாராவது தங்களுக்கு வேண்டியவர்களின் இறப்பு சான்றிதழை தொலைத்துவிட்டு, அதை மீண்டும் பெறுவதற்கான நடைமுறையாக விளம்பரம் கொடுத்து இருக்கலாம்.. ஆனால், தவறுதலாக இப்படி தனக்கு என கொடுத்துவிட்டாரோ?.. என்னவோ?.. என்றும் சில நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

English summary
An advertisement published in a newspaper in Assam stating that 'his death certificate has been lost' has netizens in a frenzy. In this, a netizen has teased that if he gets the death certificate, will he be sent to heaven?..or will he be sent to hell?..
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X