"ஊதியத்தில் 50% இனி பென்ஷனாக கிடைக்கும்".. ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் 6 மேஜர் அம்சம் இதோ
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசு பணியில் உள்ள ஊழியர்கள் ஓய்வுக்கு முன்பாக பெறும் 12 மாத சம்பளத்தின் அடிப்படை ஊதிய சராசரியில் இருந்து 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் 6 முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
நம் நாட்டில் தற்போது 2 வகையான பென்ஷன் (ஓய்வூதியம்) திட்டம் செயல்பாட்டில் உள்ளது. அதில் ஒன்று பழைய ஓய்வூதிய திட்டம். இன்னொன்று புதிய ஓய்வூதிய திட்டம். இந்த திட்டங்கள் என்பது மத்திய அரசு ஊழியர்கள் உள்பட ஒவ்வொரு மாநில அரசின் ஊழியர்களுக்கும் வித்தியாசப்படும். இந்நிலையில் தான் தற்போது ஓய்வூதியத்தில் புதிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன் பெயர் யுபிஎஸ் எனும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டமாகும் (Unified Pension Scheme or UPS).

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தான் இந்த யுபிஎஸ் எனும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது பழைய ஓய்வூதிய திட்டம் மற்றும் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். இந்த யுபிஎஸ் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் என்பது அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வர உள்ளது. அதாவது 2025 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சரி இது இருக்கட்டும். இனி இந்த யுபிஎஸ் எனும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் 5 முக்கிய சிறப்பம்சங்கள் பற்றி இங்கு பார்ப்போம்.
* யுபிஎஸ் எனும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் என்பது மத்திய அரசு ஊழியர்களானதாக அறிமுகம் ஆகிறது. இதில் முதற்கட்டமாக 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன்பெற உள்ளனர்.
* இந்த திட்டத்தின் மூலம் உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் என்பது ஊழியர்களுக்கு கிடைக்கும். அதாவது 25 ஆண்டு ஒருவர் பணியாற்றி ஓய்வு பெறுவார் என்று வைத்து கொண்டால் அவரது கடைசி 12 மாத சம்பளத்தின் அடிப்படை ஊதியத்தின் சராசரியில் இருந்து 50 சதவீதம் வரை ஓய்வூதியம் வழங்குவதை இந்த திட்டம் உறுதி செய்கிறது.
* அதேபோல் இந்த யுபிஎஸ் எனும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து 10ஆண்டுகள் வரை பணியாற்றி ஓய்வு பெறுவோருக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்க உறுதியளிக்கிறது.
* அடுத்ததாக இந்த திட்டம் குடும்ப ஓய்வூதியத்தை உறுதி செய்கிறது. அதாவது அரசு ஊழியர் இறக்கும் பட்சத்தில் அவரது அடிப்படை சம்பளத்தில் 60 சதவீத அடிப்படையில் ஓய்வூதிய பலனாக வழங்கப்படும். அதோடு இறக்கும் ஊழியரின் குடும்பத்துக்கு உடனடியாக வழங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
* மேலும் அரசு ஊழியர்களுக்கான உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் குறைந்தபட்ச ஓய்வூதியம் என 3 வகைகளிலும் Inflation Indexation அடிப்படையிலான பலன் என்பது வழங்கப்படும்.
* கடைசி பாயிண்ட் என்னவென்றால் கிராசூட்டி (Gratutuity). அதாவது பணி ஓய்வு பெற்ற தேதியில் இருந்து ஒவ்வொரு ஆறு மாதத்துக்கு ஊதியம் + அகவிலைப்படி 1/10 என்ற அளவில் இருக்கும். இந்த அளவு என்பது இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் பலன்தார்களை எந்த விதத்திலும் பாதிக்காது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications