டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும்.. பொய்களை நம்ப வேண்டாம்.. விவசாயிகளுக்கு மத்திய அமைச்சர் கடிதம்

Google Oneindia Tamil News

டெல்லி: விவசாய சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும், விவசாயிகளுக்கு, மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், விவசாய பயிர்களுக்கு வழங்கப்படும், குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி) நிறுத்தப்படும் என்று சிலர் பரப்பும் "பொய்களை" நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் பாஜக தலைமையகத்தில் கட்சி பொதுச் செயலாளர்களுடன் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு, விவசாயிகளின் போராட்டம் குறித்து விவாதித்தனர்.

Union Agriculture Minister Narendra Singh Tomar has written a letter to farmers

3 விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் நடத்தி வரும் போராட்டம் 23வது நாளை எட்டியுள்ளது. இந்த போராட்டங்கள் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஒரு குழுவை அமைத்து, விவசாய சட்டங்கள் பற்றி விவாதிக்க வலியுறுத்தியது. மேலும் சர்ச்சைக்குரிய சட்டங்களை கிடப்பில் போடலாம் என்று பரிந்துரை செய்தது. இந்த நிலையில், விவசாயத் துறை அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

English summary
Union Agriculture Minister Narendra Singh Tomar has written a letter to farmers who have been protesting against agricultural laws. In it, he called on the people not to believe the "lies" spread by some that the minimum support price (MSP) for agricultural crops would be stopped.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X