ஆதார் எண் இருக்கா.. இந்தா புடி பான் கார்டு.. விண்ணப்பமே தேவையில்லை.. பக்காவான 80 அறிவிப்புகள்!
Subscribe to Oneindia Tamil
Recommended Video
Budget 2020: Finance MInister Nirmala Sitharaman Full Speech Details
சென்னை: ஆதார் எண் அடிப்படையில் உடனடியாக ஆன்லைனில் பான் கார்டு வழங்கப்படும்; விரிவாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இனி தேவை இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற லோக்சபாவில் பட்ஜெட் தாக்கலின் போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகளின் தொகுப்பு:

- சரக்கு மற்றும் சேவை வரி, வரலாற்றுச் சிறப்பு மிக்க பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை. இது தேசத்தை ஒன்றுபடுத்தியுள்ளது.
- வர்த்தகர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகள் இல்லை.
- பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஜிஎஸ்டி அமலாக்கம்.
- 40 கோடி வர்த்தகர்கள் ஜிஎஸ்டி-யில் பதிவு செய்துள்ளனர்.
- புதிதாக 16 லட்சம் வரி செலுத்துபவர்கள் சேர்ப்பு. இதுவரை இல்லாத மைல்கல் சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
- உலகிலேயே 5 வது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது.
- முன்பு எப்போதும் இல்லாத வகையில் நேரடி அந்நிய முதலீடு 284 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது.
- அனைவருக்குமான பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாக கொண்டது இந்த பட்ஜெட். முயற்சி, உத்வேகம், உற்சாகம் ஆகிய 3 முக்கிய அம்சங்களை உள்ளடக்கியதாக இது உள்ளது.
- வேளாண் துறையை முன்னிலைப்படுத்தும் விதமாகவும், விவசாயிகளின் வருமானத்தை 2022-ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்கும் வகையிலும் பட்ஜெட் அமைந்துள்ளது.
- வேளாண் துறையைப் போட்டிகள் நிறைந்ததாக மாற்றவும், வேளாண் சந்தையை தாராளமயமாக்கவும் 15 அம்சங்கள் கொண்ட செயல் திட்டம்
- மாநிலங்கள், இந்தத் திட்டங்களை நிறைவேற்ற ஊக்கம் அளிக்கப்படும். 20 லட்சம் விவசாயிகளுக்கு சூரியசக்தி பம்புசெட்டுகள்
- பாசனத்திற்கான தண்ணீர் தட்டுப்பாடு உள்ள 100 மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
- உரங்கள் பயன்பாட்டில் சமநிலையை நிலைநிறுத்த நடவடிக்கை.
- நமது மக்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கவும், நமது வர்த்தகங்கள் ஆரோக்கியமானதாக அமையவும், அனைத்து சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் எஸ்சி-எஸ்டி பிரிவினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும் இந்த பட்ஜெட்டில் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு காரணமாக போக்குவரத்து மற்றும் சரக்குப் போக்குவரத்துத் துறையின் திறன் மேம்பட்டிருப்பதுடன், அதிகாரிகளின் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு, குறு,சிறு,நடுத்தர தொழில்துறை நுகர்வோர்களும் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பயனடைந்துள்ளனர்.
- வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கான சேமிப்புக் கிடங்குகளுக்கு புவிசார் குறியீடும், வரைபடம் வாயிலாக கண்டறியும் வசதியும் ஏற்படுத்தப்படும்.
- சுயஉதவிக் குழுக்கள் வாயிலாக கிராமங்களில் சேமிப்புக் கிடங்கு.
- வேளாண் உற்பத்திப் பொருட்களை ரயில் மற்றும் விமானம் மூலம் பல்வேறு சந்தைகளுக்கு எடுத்துச் செல்ல சிறப்பு வசதிகள்.
- ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டம் அறிமுகம்.
- ஒரு மாவட்டத்திற்கு ஒரு வேளாண் உற்பத்திப்பொருள் என்ற புதிய நோக்கிலான திட்டம்.
- முதலீடற்ற இயற்கை வேளாண் திட்டம்
- வேளாண் கடனுக்கான நிதி ஒதுக்கீடு 15 லட்சம் கோடி
- பால் பதப்படுத்துதல் அளவை இரட்டிப்பாக்கவும், மீன் உற்பத்திக்கு உத்வேகம் அளிக்கவும் முடிவு
- வேளாண் துறைக்கு 2.83 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு. ஊரக வளர்ச்சிக்கு 1.23 லட்சம் கோடி நிதிஒதுக்கீடு
- இந்திர தனுஷ் திட்டம் விரிவாக்கம். கூடுதலாக 112 மாவட்டங்களில் புதிய மருத்துவமனைகள் தனியார் மற்றும் அரசு பங்களிப்புடன் அமைக்கப்படும்.
- சுகாதாரக் கட்டமைப்புகளுக்கு முன்னுரிமை. 2025 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் காச நோயை முற்றிலுமாக ஒழிக்கத் திட்டம்.
- தூய்மை இந்தியா திட்டத்திற்கு 12,300 கோடி நிதி ஒதுக்கீடு.
- புதிய கல்விக் கொள்கை விரைவில் அறிமுகப்படுத்தப்படும். சிறந்த கல்வியை வழங்கும் வகையில், நேரடி அந்நிய முதலீடு, வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலான கல்வித் திட்டம் அறிமுகம்.
- வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்கும் வகையில் "இந்தியாவில் கல்விக் கற்க வாருங்கள்" திட்டம் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் பிரபலப்படுத்தப்படும்.
- மாவட்ட மருத்துவமனைகளில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கவும், கூடுதலாக மருத்துவர்களை நியமிக்கவும் திட்டம்
- கல்வித் துறைக்கு 99,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
- தொழில் முனைவோரே இந்தியாவின் பலம். வேலைவாய்ப்பை உருவாக்குவோர் அவர்களே. அவர்களின் முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க சிறப்பு பிரிவு
- ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையையும் எளிதாக்க முயற்சி
- உற்பத்தியை பெருக்க திட்டம். தேசிய தொழில்நுட்ப ரீதியிலான ஜவுளி இயக்கம் உருவாக்கம்
- தொழில்துறைக்கும், வர்த்தகத் துறைக்கும் 27,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
- கட்டமைப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை - கட்டமைப்புத் துறைக்கு 100 லட்சம் கோடி ரூபாய் - 5 புதிய பொலிவுறு நகரங்கள் ஏற்படுத்தப்படும்.
- புதிய கட்டமைப்புத் திட்டம் நிர்விக் அறிவிப்பு
- தில்லி-மும்பை இடையேயான அதிவிரைவுச் சாலை 2023 ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும்.
- ரயில்வேத் துறையில் தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படும், கூடுதலாக தேஜாஸ் ரயில்கள் இயக்கப்படும், 27,000 கிமீ தொலைவுக்கு ரயில்பாதை மின்மயமாக்கல்
- துறைமுகங்களை மேம்படுத்த நடவடிக்கை, முக்கியத் துறைமுகம் ஒன்று நிறுவனமயமாக்கப்படும்.
- மின்சாரத் துறைக்கு புதிய உத்வேகம் அளிக்க திட்டம், புதிய ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த நடவடிக்கை. 2023 ஆம் ஆண்டுக்குள் ப்ரீ-பெய்டு டிஜிட்டல் மீட்டர் வசதி அறிமுகம்.
- குழாய் வழியே சமையல் எரிவாயு எடுத்துச் செல்லும் திட்டம் விரிவாக்கம், கூடுதலாக 16,200 கிமீ தொலைவுக்கு குழாய்கள் அமைக்க திட்டம்
- அனைத்து கிராமங்களுக்கும், ஃபைபர் நெட் வாயிலாக இணைய வசதி, ஒரு லட்சம் பஞ்சாயத்துகள்
- நாடுமுழுவதும் புள்ளி விவர கட்டமைப்பு பூங்காக்கள்
- நாடுமுழுவதும் உடான் திட்டத்தின்கீழ் புதிதாக 100 விமான நிலையங்கள் அமைக்கப்படும்.
- சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும் பழைய அனல் மின் நிலையங்களுக்கு கட்டுப்பாடுகள், அதிகளவு கரியமில வாயுவை வெளியேற்றினால் மூட நடவடிக்கை
- ஊட்டச்சத்து திட்டத்திற்கு 35,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
- சுத்தமான காற்று திட்டத்திற்கு 44,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு, சுற்றுச்சூழலை பாதுகாக்க சுத்தமான காற்று இயக்கம்
- தேசிய பாதுகாப்புக்கு உயர் முன்னுரிமை
- பட்டியலினத்தவருக்கும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் நலத்திட்டங்களுக்காக 85,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு, பழங்குடியினர் நலனுக்கு 53,700 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு
- ஊழலற்ற, தூய்மையான நிர்வாகமே அரசின் தாரக மந்திரம்
- சுற்றுலாத் துறையை மேம்படுத்த அரசு முன்னுரிமை, 25,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
- மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறைக்கு முற்றிலும் தடை விதிக்க முடிவு
- முறையாக வரிசெலுத்துவோர் அச்சுறுத்தப்பட மாட்டார்கள்
- கம்பெனி சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும், பெரு நிறுவனங்களுக்கு சலுகைகள்
- ஜி20 நாடுகளின் உச்சிமாநாட்டை 2022 ஆம் ஆண்டு நடத்த திட்டம். இதற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு
- ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு 30,757 கோடி ரூபாய் ஒதுக்கீடு
- புதிய உருவாக்கப்பட்டுள்ள யூனியன் பிரதேசமான லடாக் மேம்பாட்டிற்காக 5958 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
- வங்கிகளில் முதலீடு செய்துள்ளவர்களின் பணம் பத்திரமாக உள்ளது, முதலீட்டாளர்களின் காப்பீடு உயர்த்தப்பட்டுள்ளது.
- வங்கித் துறையை உறுதிப்படுத்த பல்வேறு உத்வேக முயற்சிகள். முதலீட்டாளர்களின் வைப்புத் தொகைக்கான காப்பீடு 1 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சமாக உயர்வு.
- கூட்டுறவு வங்கிகள் விதிகளில் பெருமளவு மாற்றம் கொண்டு வரப்படும்.
- சிறு-குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை அம்சமாகும். இத்துறையில் கூடுதல் முதலீடு
- முதலீட்டாளர்கள் அரசு கடன்பத்திரங்களைப் பெற முடியும், இது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் முயற்சியாக இருக்கும்.
- பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும் நடவடிக்கைகள்
- ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் உள்ள அரசுப் பங்குகளின் ஒரு பகுதியை விற்க முடிவு
- வங்கிகள் அல்லாத நிதிநிறுவனங்களுக்கு பகுதியளவில் கடன் உத்தரவாதம்
- ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சி விகிதம் 10 சதவீதமாக உயர வாய்ப்புள்ளதாக, அரசு நம்பிக்கை
- நிதிப்பற்றாக்குறை 3.5 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்க வரி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
- இந்தியாவை முதலீட்டுக்கு உகந்த தேசமாக மாற்றி, உலகளாவிய முதலீடுகளை ஈர்க்கத் திட்டம்
- தனிநபர் வருமான வரிச் சலுகைகள் அறிவிப்பு - ரூ. 5 முதல் ரூ.7.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீதம், ரூ. 7.5 - 10 லட்சம் வரை 15 சதவீதம் வருமான வரி விதிக்கப்படுகிறது.
- ரூ. 10 முதல் ரூ. 12.5 லட்சம் வரை 20 சதவீதமும், ரூ. 12.5 முதல் ரூ. 15 லட்சம் வரை 25 சதவீதமும் வருமான வரி விகிதம் குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.
- ரூ. 15 லட்சத்திற்கு கூடுதலாக வருமானம் உள்ளவர்களுக்கு வரிவிதிப்பில் எந்த மாற்றமும் இல்லை, அவர்கள் 30 சதவீத வருமான வரி செலுத்துவார்கள்.
- புதிதாக எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரிச் சீர்திருத்தங்களில், விலக்குகளின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது
- புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு 5 வருட வரிச்சலுகை வழங்க திட்டம்
- வீட்டு வசதித் திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகள், கட்டுமான நிறுவனங்களின் லாபத்திற்கு ஓராண்டு வரிச் சலுகை அறிவிப்பு
- தனிநபர் வருமான வரி திட்டத்தைப் பொறுத்தவரை, வரி செலுத்துவோர் ஏற்கனவே உள்ள விதிமுறைகளை பின்பற்றலாம் அல்லது புதிய வரி விகிதத்தை ஏற்கலாம்
- ஆதார் எண் அடிப்படையில் உடனடியாக பான் கார்டு வழங்கப்படும்.
- நேரடி வரிகளுக்கான மத்திய ஆணையத்தின் விதிமுறைகளில் திருத்தங்கள் கொண்டு வரப்படும்.
- வரும் ஏப்ரல் மாதம் முதல் புதிய எளிமைப்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி முறை அமலாக்கம்
- முக்கிய மருத்துவ உபகரணங்கள் இந்தியாவிலேயே உற்பத்தியாவதால் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் இத்தகைய உபகரணங்களுக்கு சுங்கவரி அதிகரிப்பு
இவ்வாறு நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
More From
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications