14 துறைகளில் 60 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.. பட்ஜெட்டில் அறிவித்த நிர்மலா சீதாராமன்
டெல்லி: 2022-2023 ஆம் நிதியாண்டில் 14 துறைகளில் 60 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
Recommended Video
2022-2023 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 4ஆவது முறையாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட், இரண்டாவது ஆண்டாக காகிதமில்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது.

டிஜிட்டல் பட்ஜெட்டை தாக்கல் செய்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார். அவர் கூறுகையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.2% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதால் கொரோனா பரவல் குறைந்துள்ளது.
உலகின் பெரிய நாடுகளில் இந்தியா கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து வெகு வேகமாக மீண்டு வருகிறது. தற்போது இரண்டாவது ஆண்டாக டிஜிட்டல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளோம். அடுத்த 25 ஆண்டு கால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஏழைகளுக்கு அனைத்து வாய்ப்புகளையும் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வளர்ச்சி என்பதை கவனத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. 14 துறைகளில் 5 ஆண்டுகளில் 60 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். மேக் இன் இந்தியா மூலம் இந்த வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.
25,000 கி.மீ. தொலைவுக்கு புதிய தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும். வந்தே பாரத் திட்டம் மூலம் 400 புதிய ரயில் சேவைகள் இயக்கப்படும். நாடு முழுவதும் இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கப்படும். 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாநில மொழி கல்வி ஊக்குவிக்கப்படும் என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications