மத்திய பட்ஜெட் 2024: இந்த முறை விலை குறைய, கூட போகும் பொருட்கள் எவை எவை?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், விலை கூட மற்றும் குறைய உள்ள பொருட்கள் எவை எவை என்ற கேள்வி எழுந்துள்ளது.

2024-25ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். 2024 லோக்சபா தேர்தல் சில மாதங்களில் நடக்க உள்ள நிலையில் இந்த பட்ஜெட் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. லோக்சபா தேர்தல் நடக்க உள்ளதால்.. ஜூலை வரைக்குமான பாதி பட்ஜெட் தாக்கல் மட்டும் தற்போதைக்கு தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Union budget 2024-25: What is likely to get cheaper and costlier after this budget?

2024 மக்களவை தேர்தலுக்கு முன் மோடி 2.0 அரசு தாக்கல் செய்யும் இறுதியான பட்ஜெட் என்பதால் இதன் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 2 லோக்சபா தேர்தல்களில் வெற்றிபெற்ற மத்திய பாஜக அரசு.. மூன்றாவது தேர்தலில் வெற்றிபெறும் வகையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் வர வாய்ப்புகள் உள்ளன.

கடந்த பட்ஜெட் பார்வை; கடந்த 2023 பட்ஜெட்டில் வரி குறைக்கப்பட்ட பொருட்கள். அதனால் விலை குறைந்த பொருட்கள் லிஸ்ட்.

1. செல்போன், டிவிக்கள் உற்பத்திக்கான உதிரிபாகங்கள் மீதான சுங்க வரி குறைப்பு செய்யப்படுகிறது.

2. சைக்கிள், பொம்மைகளுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுகிறது,

3. லித்தியம் பேட்டரி இறக்குமதி வரி குறைக்கப்படுகிறது.

4. டிவி பேனல்களுக்கான சுங்க வரி 2.5% குறைக்கப்படுகிறது.

கடந்த பட்ஜெட்டில் வரி உயர்த்தப்பட்ட பொருட்கள். அதனால் விலை உயர்ந்த பொருட்கள்.

1. தங்கம், வைர நகைகள் மீதான சுங்க வரி அதிகரிப்பு செய்யப்படுகிறது.

2, வெள்ளி மீதான சுங்க வரி உயர்வு- வெள்ளி பொருட்கள் விலை உயருகிறது.

3. சிகரெட்டுகள் விலை உயரும்- சிகரெட்டுகள் மீது கூடுதல் வரி விதிப்பு செய்யப்படுகிறது.

4. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிகரெட்டுகள் மீதான இறக்குமதி வரி 16% உயர்கிறது.. வருமான வரி படிவம் எளிமையாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

2024 பட்ஜெட்: இந்த பட்ஜெட்டில் பெட்ரோல் டீசல் விலை மீதான வரி குறைப்பு, கலால் வரி குறைப்பு, தனி நபர் வருமான வரி குறைப்பு ஆகியவை இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் மிக முக்கியமாக பல்வேறு ரயில்வே தொடர்பான அறிவிப்புகள், இஸ்ரோ திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள், புதிய விமான நிலையங்கள், எக்ஸ்பிரஸ் வே தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக பல்வேறு பொருட்கள் மீதான வரி குறையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+