டிரம்ப் பெட்ரோல், டீசல் என்கிறார்.. மின்சார வாகனங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் என்ன எதிர்பார்க்கலாம்?
டெல்லி: பிப்ரவரி 1 ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் மின்சார கார் உற்பத்தி மற்றும் விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக சில முக்கிய வரிச்சலுகைகள் உள்ளிட்டவற்றை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் ... பட்ஜெட் இதுவாகும்.
2025-26 ஆம் நிதி ஆண்டுக்கு தாக்கல் செய்யப்படும் இந்த பட்ஜெட், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தனி நபர் வருமான வரி விகிதத்தில் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் வரும் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில் தான் மின்சார வாகன சந்தையில் மிகப்பெரும் மாற்றத்தை கொண்டு வரும் வகையில், சில முக்கிய சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று மின்சார கார் உற்பத்தி நிறுவனங்கள் வலியுறுத்தியிருக்கின்றன. அதாவது, உற்பத்தி மற்றும் நுகர்வோர் சார்ந்த சவால்களை சமாளிக்கும் விதமாக சீர்திருத்தங்களை இவி கார் உற்பத்தி சந்தையில் முக்கிய ரோல் வகிக்கும் பங்குதாரர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
முக்கியமாக ஜிஎஸ்டி வரியை எளிமைப்படுத்த வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல, மின்சார கார்கள் தயாரிப்புக்கான மூலப்பொருட்களுக்கான ஜிஎஸ்டி கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டு இருக்கிறது. கடந்த பட்ஜெட்டில் மின்சார கார்களுக்கு குறிப்பிடத்தக்க வகையில் எந்த அறிவிப்பும் இல்லை.
எனவே, இந்த ஆண்டு மின்சார கார்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிக்கும் வகையில் மாற்றங்கள் கட்டாயம் தேவை என்ற கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது. சுற்றுச்சூழல் மாசுபாடு, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைத்தன்மை ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண மின்சார வாகனங்களின் பயன்பாடு இந்தியாவுக்கு அதிகம் தேவைப்படுகிறது.
எனவே, மானியம் வழங்குதல், வரி குறைப்பு, பொது சார்ஜிங்க் உள்கட்டமைப்புக்கான முதலீடுகள் ஆகியவற்றில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்று மின்சாரா கார் சந்தை நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதேபோல, மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியை ஒரே மாதிரியாக நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
மின்சார வாகனங்களுக்கான உதிரிபொருட்கள், சார்ஜிங்க் உள்கட்டமைப்பு ஆகியவற்றிற்கு ஒரே மாதிரியாக 5 சதவிகித ஜி.எஸ்.டி என்ற கோரிக்கை வலுத்துள்ளது. தற்போது உதிரிபாகங்களுக்கு 28 சதவிகிதம் வரி விதிக்கப்படுகிறது. இந்த மாற்றம் மூலம், உற்பத்தி செலவு கணிசமாக குறையும் என்பதால் இதன் பயனை நுகர்வோர்களுக்கு உற்பத்தி நிறுவனங்கள் கடத்த முடியும்.
இதன் மூலம் மின்சார வாகனங்களை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்" என்றும் அத்துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், வரும் 1 தாக்கல் செய்யப்பட இருக்கிற பட்ஜெட்டில் மின்சார கார்களுக்கான சந்தையை ஊக்கப்படுத்தும் விதமாக முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், டீசல், பெட்ரோலுக்கு முக்கியத்துவம் தர முடிவு செய்துள்ளார். எனவே எலக்ட்ரிக் வாகன விற்பனை மந்தப்பட வாய்ப்புள்ளது. இந்த நிலையில் மத்திய பட்ஜெட்டில் என்ன மாதிரி அறிவிப்பு வெளியிடப்படும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications