மத்திய பட்ஜெட் 2025-26: ஜிஎஸ்டி வரி குறைப்பு, ஜிஎஸ்டி வரி விலக்கை எதிர்பார்க்கும் பெரு நிறுவனங்கள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வருமான வரி செலுத்தக் கூடிய தனிநபர் தொடங்கி தொழில்நுட்பத்துறை, சுகாதாரத்துறை, ரியல் எஸ்டேட் துறை என அனைத்து துறைகளும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பிப்ரவரி 1-ந் தேதி பட்ஜெட் உரையை பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றன.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ந் தேதி 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார். தற்போதைய மோடி 3.0 அரசில் 2-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். மத்திய நிதி அமைச்சராக 6 முறை முழுமையான பட்ஜெட்டையும் 2 முறை இடைக்கால பட்ஜெட்டையும் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கிறார்.

budget 2025 union budget 2025 nirmala sitharaman 2025 2025

வருமான வரி செலுத்தக் கூடிய தனிந்பர்கள் தொடங்கி தொழில்நுட்பத்துறை, சுகாதாரத்துறை, ரியல் எஸ்டேட் துறை என அனைத்து துறைகளும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையை பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றன.

அதேநேரத்தில் பிப்ரவரி1-ந் தேதி எத்தனை மணிக்கு பட்ஜெட் உரையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிகழ்த்துவார் என மத்திய நிதி அமைச்சகம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதே நேரத்தில் பிப்ரவரி 1-ந் தேதி சனிக்கிழமை விடுமுறை நாளாக இருந்த போதும் அன்றைய தினம் பங்கு சந்தைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்டானது இந்த முறையும் எரிசக்தி மற்றும் உற்பத்தித் துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக வாய்ப்பிருக்கிறது. மரபு சாரா எரிசக்தி துறைக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யக் கூடும் என்கின்றனர் தொழில்துறை வல்லுநர்கள்.

அதேபோல சுகாதாரத்துறையினரும் ஜிஎஸ்டி வரி விதிப்பு குறைக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பில் உள்ளனர். தற்போது மருத்துவ உபகரணங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இதனை 5% ஆக குறைக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பு.

அதேபோல ரியல் எஸ்டேட் துறைக்கு புத்துயிர் கொடுக்கும் வகையிலான அறிவிப்புகள் இடம் பெற வேண்டும் என்கிற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. ரியல் எஸ்டேட் துறை பங்குகள் 2019-ம் ஆண்டு 38% வளர்ச்சி அடைந்திருந்தது. தற்போது 18% ஆக குறைந்துவிட்டது. இதனால் ரியல் எஸ்டேட் துறை குறித்த பல்வேறு சீர்திருத்தங்கள் அவசியம் என எதிர்பார்க்கின்றனர்.

சுற்றுலாத்துறையைப் பொறுத்தவரையில் ரூ7,500-க்கும் அதிகமான ஹோட்டல் ரூம்களின் வாடகைக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதை 12% ஆக குறைக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது. இ காமர்ஸ் வர்த்தகத்துக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+