2025 பட்ஜெட் தயாரிப்பில் முக்கிய பங்கு.. நிர்மலா சீதாராமனின் டாப் டீம் இதுதான்.. யார் யார்? விவரம்!
டெல்லி: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் சனிக்கிழமை 2025 - 26 ஆம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். நிதி அமைச்சர் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட் தயாரிக்கும் குழுவில் இடம் பெற்றுள்ள மூத்த அதிகாரிகள் யார் யார்? என்ற விவரங்களை பார்க்கலாம்.
2025-26-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. நிா்மலா சீதாராமன் தொடா்ந்து 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றுகிறார். நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மறுநாள் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், நாளை பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.

பட்ஜெட்டை பொறுத்தவரை பல்வேறு பொருளாதார சவால்களுக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட உள்ளது. 2025-26 பட்ஜெட் பொருளாதார முன்னேற்றத்தையும் நிதி நிலைத்தன்மையையும் சமநிலைப்படுத்தும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள இந்த பட்ஜெட் உரையை தயாரிக்கும் பணியில் திறன் வாய்ந்த நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவின் பொருளாதாரத்திற்கான வழிகாட்டியாக அறியப்படும் இந்த பட்ஜெட்டின் தயாரிப்பு குழுவில் அங்கம் வகிக்கும் முக்கிய பிரமுகர்கள் யார் என்ற விவரங்களை பார்க்கலாம்.
வி ஆனந்த நாகேஸ்வரன்
தலைமை பொருளாதார ஆலோசகரான வி.ஆனந்த நாகேஸ்வரன் ஐஐஎம் அகமதாபாத்தில் பயின்றவர். பட்ஜெட் இலக்குகளை நிர்ணயிக்கும் பெரிய பொருளாதார கட்டமைப்பை நிறுவும் பொறுப்பு இவருக்கே உள்ளது. பொருளாதார ஆய்வறிக்கை தயாரிக்கும் குழுவிற்கு இவரே தலைமை தாங்குகிறார். பட்ஜெட்டிற்கு முந்தைய நாளில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். நடப்பு நிதியாண்டுடன் இவரது பதவிக்காலம் முடிவடைகிறது.
மனோஜ் கோவில்
நிதி அமைச்சகத்தின் செலவினத் துறையின் செயலாளராக இருப்பவர் டாக்டர் மனோஜ் கோவில். இவர் ஐஐடி கான்பூரில் பயின்றவர். புதிய திட்டங்களுகான ஒப்புதல், செலவினங்கள், மாநிலங்களுக்கு வளங்களை பகிர்வது உள்ளிட்ட பணிகளை இவர் மேற்பார்வையிடுகிறார். 1991 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான மனோஜ் கோவில், மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர். ஆகஸ்ட் 2024 முதல் இவர் செலவின துறையின் செயலாளராக உள்ளார்.
அஜய் சேத், பொருளாதார விவகார செயலாளர்
பட்ஜெட் தயாரிக்கும் குழுவில் இடம்பெற்றுள்ள மூத்த அதிகாரிகளில் இவரும் ஒருவர். பொருளாதார விவகார துறையை 2021 ஏப்ரல் முதல் இவரே வழி நடத்தி வருகிறார். பட்ஜெட் இறுதி ஆவணங்களை தயாரித்தல், மேக்ரோ பொருளாதாரம் நிலைத்தன்மையை உறுதி செய்வது உள்ளிட்ட பணிகளை செய்கிறார்.
துஹின் கந்தா பாண்டே - நிதி மற்றும் வருவாய் செயலர்
வருவாய் செயலாளரான துஹின் கந்தா பாண்டே, ஒடிஷா கேடரை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார். சமீபத்தில்தான் இவர் வருவாய் செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார். பொது சொத்து மேலாண்மையில் நிபுணத்துவம் பெற்றவர். வருவாயை பெருக்குதல், மற்றும் வரிமுறையை எளிமைப்படுத்துவது உள்ளிட்டவை இவர் முன் இருக்கும் சவாலான பணியாகும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications