பட்ஜெட்டில் கவர்ச்சி அறிவிப்புகள் மட்டும் போதாது.. இதையெல்லாம் செய்யனும்! லிஸ்ட் போட்ட நிபுணர்கள்
டெல்லி: தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. பட்ஜெட் குறித்து பேசும் நிபுணர்கள், இந்த முறை வெறும் கவர்ச்சி அறிவிப்புகள் மட்டும் கொடுத்தால் போதாது.. உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
நிதித் துறையைச் சேர்ந்தவர்கள் அரசுக்கு முக்கிய கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். மூலதனக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துதல், பொறுப்பான கடன் விரிவாக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் நிதிச் சேர்க்கையை ஆழப்படுத்துதல் போன்ற கொள்கை நடவடிக்கைகள் மூலம் நிதி அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு.

மூலதனக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துதல்
வங்கி ஒருவருக்கு கடன் கொடுக்க வேண்டும் எனில், அந்த நபர் கடனை திருப்பி செலுத்தும் தகுதியுடையவராக இருக்க வேண்டும். அதாவது ஒருவர் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் சம்பாதிக்கிறார் எனில், அவருக்கு ரூ.2 லட்சம் வரை கடன் கொடுக்கலாம். ஊதியம் குறைவாக இருக்கிறது எனில், வங்கிகள் கடன் கொடுக்காது. காரணம் இதற்கு RBI ரூல்ஸ் ஒப்புக்கொள்ளாது. இந்த கட்டுப்பாடுகள், வங்கிகள் போன்ற நிதி நிறுவனங்களை அதிகமாக கட்டுப்படுத்துகிறது எனவும், இந்த கட்டுப்பாடுகளை குறைக்க வேண்டும் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இப்படி செய்வதன் மூலம் மக்கள் மத்தியில் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்றும், புதிய தொழில்கள் தொடங்குவது சாத்தியமாகும் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
பொறுப்பான கடன் விரிவாக்கத்தை ஊக்குவித்தல்
பரவலாக கடன் கொடுக்க வேண்டும் என்று கூறும் நிபுணர்கள், தகுதியானவர்களுக்கு மட்டுமே கடன் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். கடனை திருப்பி செலுத்த முடியாத நபர்களுக்கு, காசு கொடுப்பதால்.. அது வாராக்கடனாக மாறும். எனவே இதனை தவிர்க்க, கடன் கொடுப்பதற்கு முன்னர் தீவிர ஆய்வை மேற்கொள்ள வேண்டும். இதை செய்வதன் மூலம் பொருளாதாரம் உயரும், வங்கிகளும் கடன் நெருக்கடியில் சிக்காது. இதை மத்திய அரசு செய்ய ஊக்குவிக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
நிதிச் சேர்க்கையை ஆழப்படுத்துதல்
இதுவரை வங்கி சேவையே சென்று சேராத கடைக்கோடி மக்களுக்கும் சேவையை விரிவுப்படுத்துவதைத்தான், நிதிச் சேர்க்கையை ஆழப்படுத்துதல் என்று சொல்கிறார்கள். வெறுமென வங்கிக்கணக்குகளை மட்டுமே தொடங்குவது முதல்படி. இந்த கணக்கை மக்கள் முழுமையாக பயன்படுத்த வைப்பது என்பது இரண்டாவது கட்டம். இன்சூரன்ஸ், ஓய்வூதிய திட்டம் மற்றும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை தொடங்குதல் ஆகியவை மூலம் இதனை சாத்தியப்படுத்த முடியும்.
இப்படி செய்வதால் கந்துவட்டி போன்ற நெருக்கடியை தவிர்க்க முடியும். எனவே அரசு பட்ஜெட்டில் இதற்கான செயல் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று நிபுணர்கள் கோருகின்றனர்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications