ரயில்வே ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. 78 நாட்கள் ஊதியம் தீபாவளி போனஸ்- மத்திய கேபினட் ஒப்புதல்
டெல்லி: ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனசாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 11.72 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியம் தீபாவளி போனசாக வழங்கப்பட உள்ளது.
மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார்.

அப்போது, 11.72 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக 78 நாள் ஊதியம் வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்து இருப்பதாக கூறினார். மத்திய அரசின் இந்த முடிவு மூலம் 12 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள். 78 நாட்கள் ஊதியம் போனசாக வழங்குவதன் மூலம் மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.2,029 கோடி செலவு ஏற்படும். தீபாவளி பண்டிகை வரும் 31 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் தொகைக்கு கேபினட் ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய கேபினட் ஒப்புதல் அளித்து இருக்கும் இந்த தொகை ரயில்வேயில் பணியாற்றும் பல்வேறு தரப்பு ஊழியர்களுக்கும் கிடைக்கும். அதாவது, ரயில்வே டிராக் பராமரிப்பாளர்கள், லோகோ பைலட்கள், டிரெயின் மேனேஜர்ஸ், ஸ்டேஷன் மாஸ்டர்ஸ், சூப்பர்வைசர்ஸ், டெக்னிஷியன்ஸ், டெக்னிஷியன்ஸ் ஹெல்பர்ஸ், பாயின்ட்ஸ்மேன், அமைச்சரவை ஊழியர்கள் மற்றும் பிற குரூப் XC ஊழியர்களுக்கும் இந்த போனஸ் கிடைக்கும்.
ரயில்வே ஊழியர்களின் சிறப்பான செயல்திறனை பாராட்டி மத்திய அமைச்சரவை இந்த தொகையை (PLB) வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ரூ.17,951 வரை 78 நாட்கள் ஊதியமாக வழங்கப்படும். கடந்த ஆண்டும் 78 நாட்கள் ஊதியம் போனசாக வழங்கப்பட்டது. 6-வது ஊதிய கமிஷன்படி, குரூப் 4 ஊழியர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை சம்பளமாக ரூ.7 ஆயிரம் வழங்கப்படுகிறது.
இதை 78 நாட்கள் ஊதியமாக கணக்கிட்டால் ரூ.18 ஆயிரம் வரை கிடைக்கும். கடந்த 2022 ஆம் ஆண்டும் தீபாவளி போனசாக 78 நாட்கள் ஊதியமே அளிக்கப்பட்டது. அப்போது சுமார் 11 லட்சம் ரயில்வே ஊழியர்கள் போனஸால் பயன் அடைந்தனர். அரசு ரூ.1,832 கோடியை அந்த ஆண்டு ஒதுக்கியது.
போனஸ் தொடர்பான அறிவிப்பு மட்டும் இன்றி ரயில்வேயில் 58 ஆயிரத்து 642 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "ரயில்வேயில் 58,642 இடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவிலான எண்ணிக்கையை வெளியிட்டு எதிர்க்கட்சிகள் மக்களை குழப்ப நினைக்கின்றன. அதனால், இந்த எண்ணிக்கையை நான் வெளியிட்டுள்ளேன்" என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications