14 பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை பல மடங்கு உயர்த்த மத்திய அமைச்சரவை அதிரடி ஒப்புதல்!
டெல்லி: நெல், சோளம், கேழ்வரகு, நிலக்கடலை உள்ளிட்ட 14 பயிர்களுக்கான குறைந்தபட்ச விலையை பலமடங்கு உயர்த்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை அதிரடியாக ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சரவை ஒப்புதலின் படி, நெல்லின் விலை குவிண்டாலுக்கு ரூ. 117-ம், சோளம் விலை குவிண்டாலுக்கு ரூ. 191-ம், கேழ்வரகு விலை குவிண்டாலுக்கு ரூ. 444-ம், மக்காச்சோளம் விலை குவிண்டாலுக்கு ரூ. 135-ம், பயத்தம் பருப்பு விலை குவிண்டாலுக்கு ரூ. 124-ம் அதிகரிக்கும்.
இது தொடர்பாக மத்திய அரசு கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (19.06.2024) நடைபெற்ற மத்திய அமைச்சரவை, 2024-25 சந்தைப் பருவத்திற்கு கரீஃப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகளுக்கு சென்ற ஆண்டை விட, இந்த ஆண்டுக்கு அதிக அளவில் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன்படி எள்ளின் விலை குவிண்டாலுக்கு ரூ. 632-ம், காட்டு எள்ளின் (நைகர் சீட்) விலை குவிண்டாலுக்கு ரூ. 983-ம், துவரம்பருப்பு குவிண்டாலுக்கு ரூ. 550-ம் அதிகரிக்கும்.
நெல்லின் விலை குவிண்டாலுக்கு ரூ. 117-ம், சோளம் விலை குவிண்டாலுக்கு ரூ. 191-ம், கேழ்வரகு விலை குவிண்டாலுக்கு ரூ. 444-ம், மக்காச்சோளம் விலை குவிண்டாலுக்கு ரூ. 135-ம், பயத்தம் பருப்பு விலை குவிண்டாலுக்கு ரூ. 124-ம் அதிகரிக்கும்.
எண்ணெய் வித்துகளை பொறுத்தவரை நிலக்கடலை விலை குவிண்டாலுக்கு ரூ. 406-ம், சூரியகாந்தி விதையின் விலை குவிண்டாலுக்கு ரூ. 520-ம், சோயாபீன் (மஞ்சள்) விதையின் விலை குவிண்டாலுக்கு ரூ. 292-ம் அதிகரிக்கும்.
நடுத்தர இழை மற்றும் நீள இழை பருத்தியின் விலை குவிண்டாலுக்கு ரூ. 501 அதிகரிக்கும்.
அகில இந்திய அளவில் சராசரி உற்பத்தி செலவில் குறைந்தபட்சம் 1.5 மடங்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிப்பது என மத்திய பட்ஜெட் 2018-19-ல் அறிவிக்கப்பட்டதற்கு ஏற்ப, 2024-25 சந்தைப் பருவத்தில் கரீஃப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அமைச்சரவையின் ஒப்புதலின்படி நெல் குவிண்டால் ரகங்களின் அடிப்படையில் குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ2183-ல் இருந்து ரூ2300 ஆகவும் ரூ2203-ல் இருந்து ரூ2320 ஆகவும் உயரும்.
நிலக்கடலையின் குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ6377-ல் இருந்து ரூ6783
ஆக அதிகரிக்கும். பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையானது ரகங்களின் அடிப்படையில் ரூ 6620-ல் இருந்து ரூ 7121 ஆகவும் ரூ7020-ல் இருந்து ரூ 7521 ஆகவும் உயரும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications