அப்ப சிலிண்டர் விலை குறைப்பு- இப்போ பெட்ரோல், டீசல் விலை குறைப்பா? இன்று கூடுது மத்திய அமைச்சரவை!
டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகுமா? என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தெலுங்கானா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் மாநில சட்டசபைகளுக்கு நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் எப்படியாவது சில மாநிலங்களிலாவது வெல்ல வேண்டிய கட்டாயத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசு இருந்து வருகிறது.

இதனால் அண்மையில் வரலாறு காணாத விலை உச்சத்தில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ200 குறைத்து அறிவிப்பு வெளியிட்டது மத்திய அரசு. அந்த அறிவிப்பில், 30.08.2023 முதல், நாடு முழுவதும் உள்ள அனைத்து சந்தைகளிலும் 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலை 200 ரூபாய் குறைக்கப்படும். உஜ்வாலா திட்டத்தின் குடும்பங்களுக்கு சிலிண்டருக்கு தற்போதுள்ள மானியமான 200 ரூபாய் வழங்கப்படுவதுடன், மேலும் ரூபாய் 200 குறையும். குடிமக்கள் மீதான நிதிச் சுமையைக் குறைப்பதற்கும், குடும்பங்களின் நலனை மேம்படுத்துவதற்கும் அரசின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முடிவுகள் வந்துள்ளன. சமையல் எரிவாயு விலை குறைப்பு குடிமக்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிப்பதற்கும், நியாயமான விலையில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்கும் அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என தெரிவித்திருந்தது. இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது. இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
நாட்டின் பெட்ரோல் விலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எந்த மாற்றமும் இல்லாமல் ரூ100க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது பொதுமக்களுக்கு பெரும் துயரத்தைத் தந்து வருகிறது. 5 மாநில தேர்தல்கள் நடைபெறும் நிலையில் பெட்ரோல், டீசல் விலையை கணிசமான அளவு மத்திய அரசு குறைத்து அறிவிப்பு வெளியிடக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அத்துடன் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் வரும் 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இக்கூட்டத் தொடர் நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பும் இன்றைய அமைச்சரவை கூட்டத்துக்குப் பின் வெளியாகலாம் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications