பிஎஸ்என்எல்லுக்கு புத்துயிர் கிடைக்குமா.. ரூ.1.64 லட்சம் கோடி ஒதுக்கீடு!
டெல்லி: பிஎஸ்என்எல் நிறுவனத்தை வலுப்படுத்த ரூ.1.64 லட்சம் கோடி வழங்க மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
இந்தியாவில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் போட்டியின்றி வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது. இந்த நிலையில் தனியார் நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க மத்திய அரசு முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

ரூ.1.64 லட்சம் கோடி
பிஎஸ்என்எல் நிறுவனத்தை வலுப்படுத்தவும், சேவைகளை விரிவுப்படுத்தவும் ரூ.1.64 லட்சம் கோடி வழங்க மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், மத்திய அமைச்சரவை ஒதுக்கியுள்ள ரூ.1.64 லட்சம் கோடி நிதி பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஃபைபர் ரீச் விரிவாக்கம் மற்றும்ம் சேவைகளின் தரத்தை மேம்படுத்த பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

4ஜி சேவை
இந்த நிதியில் ஸ்பெக்ட்ரம், மூலதன முதலீடு ஆகியவற்றுக்காக ரூ.44 ஆயிரம் கோடியும், மீதமுள்ள ரு.1.20 லட்சம் கோடி பிஎஸ்என்எல் சேவை மேம்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் இந்த நிதி நான்கு வருடங்களுக்கு பிரித்து வழங்கப்படும். இதன்மூலம் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி சேவைக்கான அனுமதி வழங்கப்படுவதோடு, அடுத்த இரண்டு வருடங்களுக்குள் வளர்ச்சி அனைவருக்கும் தெரியும்.

வேலைவாய்ப்பு
மத்திய அரசின் இந்த மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் 2026-27 நிதியாண்டில் பிஎஸ்என்எல் லாபகர நிறுவனம் மாறும். அதேபோல் நாட்டில் வரி செலுத்துவோரின் பணம் பிஎஸ்என்எல் மறுமலர்ச்சி திட்டத்திற்கு செலவழிக்கப்படுகிறது. இதன்மூலம் அடுத்த சில ஆண்டுகளில் ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் - பிபிஎன்எல் இணைப்பு
அதேபோல் பிபிஎன்எல் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்களை இணைக்கவும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பிஎஸ்என்எல் 6.83 லட்சம் கி.மீ அதிகமான ஆப்டிகல் ஃபைபர் கேபிள் நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது. இந்த இரண்டையும் இணைத்த பின்னர், 5.67 லட்சம் கி.மீ ஆப்டிகல் ஃபைபர் வசதிபெறும் நிறுவனமாக பிஎஸ்என்எல் மாறும். இந்த ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க் நாட்டிலுள்ள 1.85 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் யுனிவர்சல் சர்வீஸ் ஒப்லிகேஷன் ஃபண்ட் மூலம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications